Sunday, November 28, 2010

நந்தலாலா - விமர்சனம்

நந்தலாலா பேரை கேட்கையில் ஒரு வித பரவசம் நம்மை தொற்றிக்கொள்ளும். அதை விட பல மடங்கு பரவசத்துடன் ஈரம் காயாத விழிகளோடு இதை எழுதுகிறேன்.


எவ்வளவு நாள் ஆச்சு இப்படி ஒரு தமிழ் திரைப்படத்தை ரசித்து பார்த்து. முதலில் இந்த படத்தின் குழுவிற்கு ஒரு royal salute.


படத்தின் கதை இது தான். தனது தாயை தேடி பயணம் மேற்கொள்ளும் ஒரு சிறுவனும் அதே காரணத்துடன் பயணிக்கும் ஒரு மனநலம் சரியில்லாத ஒரு மனிதனும் சந்திக்கும் மனிதர்கள் மற்றும் அவர்களின் அனுபவங்கள். அவர்களின் ஒவ்வொரு அனுபவமும் அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் அந்த சூழ்நிலையும் தமிழ் சினிமாவிற்கு புதிது. ரசிக்கும் படியாகவும் உள்ளது சினிமாத்தனம் இல்லாமல்.


 ஆனால் திரையில் செதுக்கி இருக்கும் விதம் நமக்கு ஒரு இனிய மறக்க முடியாத அனுபவம். இதற்கு பெரிய தூணாக ஏன் இந்த படத்தையே தூக்கி சுமப்பது இரண்டு விஷயங்கள். ஒன்று இசை ஞானி இளையராஜா அவர்களின் இசை இன்னொன்று புது புது கேமரா கோணங்களில் கதையுடன் நம்மையும் பயணிக்க வைக்கும் cinematographer மகேஷ் முத்துசாமி. படத்தில் வரும் பாத்திரங்களுடன் நாமும் சேர்ந்து பயணிப்பது போன்ற ஒரு உணர்வு வருவதற்கு இவரும் ஒரு மிக மிக முக்கிய காரணம். படத்தில் நடித்திருக்கும் இயக்குனர் மிஸ்கின் ஆகட்டும், அல்லது அகி என்ற கதாபாத்திரத்தில் வரும் அந்த சிறுவனாகட்டும் நாம் ஒரு படத்தை பார்க்கிறோம் என்ற நினைப்பே வராத வகையில் அருமையாக செய்துள்ளனர். ஸ்னிக்தாவிற்கு பெரிய அளவில் வேலை இல்லை என்றாலும் நிறைவாகவே செய்திருக்கிறார்.


title card போடும் போது நீரோடையின் ஓசையுடன் ஆரம்பிக்கும் இசைஞானி அவர்களின் இசை ராஜாங்கம் படம் முழுவதும் மட்டும் இல்லாமல் நம் மனது முழுவதும் ஆக்கிரமித்து படத்தின் ஒட்டு மொத்த உணர்வையும் நமக்கு கொடுத்து விடுகிறது என்றால் அது மிகை அல்ல. அந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அனுபவத்தால் மட்டுமே உணர முடியும். திரை அரங்கில் என்னுடன் படம் பார்த்த  பலரது கண்களில் தேம்பிய கண்ணீரே அதற்கு உதாரணம். ஒரு காட்சியில் அல்ல பல இடங்களில்.

"ஒன்னுக்கொன்னு துணை இருக்கும் உலகத்திலே அன்பு ஒன்னு தான் அனாதையா" பாடல் படத்தில் வரும் இடம் மற்றும்  K J ஜேசுதாஸ் அவர்களின் உருக்கும் குரல் கல் நெஞ்சக்காரர்களை கூட கரைத்து விடும்.

" மண்ணில் தானே எல்லைக்கோடுகள் மனதில் கோடு யார் போட்டது ;
  பெற்றால் தானா பிள்ளை பூமியில் எல்லாம் எல்லாம் நம் பார்வையில்"

 இது போன்ற நல்ல கருத்துள்ள பாடலை கேட்கையில்  " உன்னால் முடியும் தம்பி" படத்தின் எனக்கு மிகவும் பிடித்த " அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா " பாடலை போன்ற ஒரு பாடல் இப்போது கூட நமக்கு கிடைக்கிறதே என்ற சந்தோசம் கிடைக்கிறது.

மேலும் " தாலாட்டு கேட்க நானும் " இளையராஜா அவர்களின் குரலில் சோகத்தை நம் நெஞ்சில் சேர்த்து விடுகிறது. அனைத்து பாடல்களை ஏற்கனவே அடிக்கடி கேட்டு விட்டதால் இன்னும் இரண்டு பாடலை கூட சேர்த்து இருக்கலாமே என்று ஒரு சின்ன ஆசை. ஆனால் படத்திற்கு அது தேவை இல்லை என்பது சரியான முடிவு தான்.



படத்தின் பல முக்கிய காட்சிகளில் வசனமே உபயோகிக்காமல் இசையின் மூலமே உணர்த்தியிருப்பது மிஸ்கினின் சாமர்த்தியம். இசையை உபயோகித்து இவ்வளவு விசயங்களை செய்ய முடியும் என்றால் அது இளையராஜா அவர்களால் மட்டுமே சாத்தியம் (True Maestro). இவரை போன்றவர்களின் காலத்தில் வாழ்ந்து இவர்  படைப்புக்களை அனுபவிக்கும் அதிர்ஷ்டம் பெற்றவர்கள் நாம் அனைவரும்.


என்னடா படம் விமர்சனம் என்று போட்டு விட்டு இசையை பற்றி மட்டுமே சொல்லி கொண்டு இருக்கிறேன் என்று கேட்பவர்களுக்கு படத்தை பார்த்தால் நான் சொல்வது புரியும். இசை இல்லாத இந்த படத்தை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அது தான் இந்த படத்தின் உயிர் நாடி. இதை மிஸ்கின் கூட சொன்னார் இப்படி " நந்தலாலா என்று இந்த படத்தின் பெயரை எழுதியது அவர் எழுதிய அடுத்த பெயர் இளையராஜா ".

சில இடங்களில் திரைக்கதையில் கொஞ்சம் தொய்வு இருந்தாலும் plus points மிக அதிகமாக இருக்கும் இது போன்ற நல்ல முயற்சியை கண்டிப்பாக வரவேற்க தான் வேண்டும்.

மொத்தத்தில் நந்தலாலா ஒரு திரைப்படம் அல்ல நல்ல இசையுடன் கூடிய ஒரு இனிய அனுபவம்.  DONT MISS IT.



டிஸ்கி : திரை அரங்கில் எங்களுடன் படம் பார்க்க வந்த நந்தலாலா படத்தின் associate director கூறிய ஒரு விஷயம் படத்தின் படத்தின் நீளம் கருதி கடைசி 45 நிமிட climax  நீக்கப்பட்டிருக்கிறது. இசைஞானி அவர்களின் மிரட்டலான இசையில் மட்டுமே உருவான அந்த காட்சிகளை நம்மால் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் இருக்கிறது அவர் கூறிய அந்த வெளி வராத காட்சிகளை பற்றி கேட்டவுடன். ஆனால் அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு எடுத்த அந்த காட்சிகளை படத்தின் dvd உடன் சேர்த்து ரிலீஸ் செய்ய திட்ட மிட்டிருக்கின்றனர் தயாரிப்பாளர்கள் என்பது தான் சந்தோசமான செய்தி.


மிஸ்கின் உருட்டி உருட்டி முழிக்கும் காட்சி கண்களிலேயே நிற்கிறது. படம் முடிந்து வெளியே சந்தித்த போது மிஸ்கின்னிடம் இவ்வளவு expression கொடுக்குற கண்ணை ஏன் சார் கண்ணாடி போட்டு மறைக்கிறீங்க என்று சில நண்பர்களும் எங்களுடன் சேர்ந்து சில family உடன் வந்திருந்த சில தாய்மார்களும் கேட்க உடனே மிஸ்கின் கண்ணாடியை கலட்டி விட்டு எங்களுக்கு போஸ் கொடுத்தார்.



எங்களை சந்தித்த மிஸ்கின் அவர்களுக்கும் எங்களுடன் சேர்ந்து படம் பார்த்த நந்தலாலா பட குழுவிற்கும்  நன்றியை தெரிவித்து நாங்கள் கூறிய ஒரு விஷயம் இது போன்ற பல நல்ல படைப்புகளை உங்களிடம் எதிர்பார்க்கிறோம் என்று தான் .

Sunday, August 8, 2010

எந்திரன் - இசை எனது பார்வையில்

நீண்ட நாள் கிடந்த தவத்தின் பலன் இதோ ஓரளவு கிடைத்து விட்டது. ஆம் எந்திரன் பாடல்கள் வெளியாகி விட்டதை தான் சொல்கிறேன்.

முதலில் இந்த album நாயகன் oscar winner நமது ரகுமான் இத்தகைய படத்திற்கு தான் ரொம்ப ஏங்கி கிடந்திருக்கிறார் போல. சும்மா புகுந்து விளையாடி இருக்கிறார். என்ன என்ன experimentation பண்ண முடியுமோ அனைத்தையும் perfection உடன் செய்திருக்கிறார். அதன் விளைவு அனைத்து பாடல்களையும் கேட்கும் போது நமக்கு கிடைக்கும் ஒரு புதுமையான அனுபவம் . 

சில பாடல்கள் ரகுமானின் வழக்கமான style பாடல்கள்  தான். அவற்றை பற்றி முதலில் பேசுவோம்.

 காதல் அணுக்கள்

காதல் அணுக்கள்  உடம்பில் எத்தனை neutron electron உன் நீலக்கண்ணில் மொத்தம் எத்தனை என்று ஆரம்பிக்கும் ஒரு விஞ்ஞான எண்ணத்துடன் கூடிய duet பாடல். vintage rahman melody. கேட்பதற்கும் அதை விட பார்பதற்கும் மிகவும் இனிமையாக இருக்கிறது(உபயம் : trailor clipping).
 
அரிமா அரிமா

ஹரிஹரன் சாதனா சர்கம் பாடியிருக்கும் ஒரு perfect superstar பாடல்.

 "உன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும் உலகம் உலகம் கை தட்டும் நீ உலகம் தாண்டிய உயரம் கொண்டதில் நிலவு நிலவு தலை முட்டும் " என்று உண்மையை கூறி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் இந்த வரிகள் தான் இந்த பாடலின் பெரும் பலம்.

"நான் மனிதன் அல்ல அக்றினையின் அரசன் நான் காமுற்ற கணினி நான் சின்னஞ்சிறுசின் இதயம் தின்னும் சிலிகான் சிங்கம் நான் " 

 என்று வைரமுத்து அவர்கள் ரோபோ ரஜினியின் புகழ் பாடியிருக்கும் பாடல். சிலிகான் சிங்கம் போன்ற வரிகள் வரும் போது ஹரிஹரன் அவர்களின் modulation அருமை.

Boom boom robo da zoom zoom robo da

ஏ ஆர் ரகுமான் வழக்கமாக rap பாட வைக்கும் blaze இல்லாமல் முதல் முறையாக Yogi B உடன் இணைந்திருக்கும் ஒரு rap பாடல். ரோபோ ரஜினியின் BGM என்று நினைக்கிறேன்.

வைரமுத்துவின் வாரிசு மதன் கார்க்கியின் (robotics professor என்று நினைக்கிறேன்) வரிகளில்  அறிவியலும் தெரிகிறது தந்தை பாணியில் ஆய்வும் அறிவும் தெரிகிறது. எழுதுவது superstar ரஜினிக்கு என்பதால் இது போன்ற வரிகளை பாடலில் புகுத்தி இருப்பது அவர் புத்திசாலித்தனம்.

" ஆட்டோ ஆட்டோக்காரா ஏ ஆட்டோமேடிக் காரா கூட்டம் கூட்டம் பாரு உன் ஆட்டோகிராப்புக்கா "


 Chitti Dance Showcase

பூம் பூம் ரோபோ டா பாடலின் இன்னொரு version. trailor பார்த்ததில் இருந்து இந்த பாடலில் இதுவரை பார்த்திடாத நம் superstar dance movements பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

கிளிமாஞ்சாரோ

பா விஜய் எழுதியுள்ள ஒரே பாடல் . முழுக்க முழுக்க ஒரு african tribal song என்று ஷங்கர் சொல்லி இருக்கிறார். மேலும் மிச்சு பிச்சுவில் அருமையான இடங்களில் படமாக்கி இருக்கிறார்கள். கேட்பதற்கு புதுமையாக தான் இருக்கிறது. பார்ப்போம்.


இரும்பிலே ஒரு இருதயம்

முதலில் கேட்ட போது எது ஏதோ pop song போல இருக்கிறதே என்று நினைத்தேன். ஆனால் கேட்க கேட்க சும்மா பத்திக்கிர பாடல் இது. பாடியிருப்பவர் சாட்சாத் ஏ ஆர் ரகுமானே . தனது காந்தர்வ குரல் மூலம் magic செய்திருக்கிறார். அநேகமாக படம் பார்க்கும் போது இது தான் இன்னொரு அதிரடிக்காரன் போல இருக்கும். கார்க்கி அவர்கள் இந்த படத்தில் எழுதியிருக்கும் பாடல்களில் " The best "   

எச்சில் இல்லா எந்தன் முத்தம் சர்ச்சை இன்றி கொள்வாயா
ரத்தம் இல்லா காதல் என்று ஒத்திப் போக சொல்வாயா

உயிரியல் மொழிகளில் எந்திரன் நானடி 
உளவியல் மொழிகளில் இந்திரன் தானடி 

என்பது போன்ற அறிவியல் ஹை கூ கவிதைகள் நம் தமிழ் திரை உலகிற்கு புதிது தான்.

இனி எந்திரனின் ஹைலைட்டிற்கு வருவோம் :

புதிய மனிதா

"Anything that starts well ends well " என்பது போல இந்த album ஆரம்பமே இந்த அதிரடி பாடல் தான். இந்த படத்தின் பாடல்களின் உச்சம் இந்த பாடல் தான்

இது வரை நாம் கேட்டிராத புதுமையான fresh ஆன இசை. ஏ ஆர் ரகுமானின் குரலில் எந்திரனின் உருவாக்கத்தை விளக்கும் பாடல் பின் அவர் மகள் கதிஜா குரலில் வந்து SPB அவர்களின் மயக்கும் குரலில் நுழையும் போதே நாம் இது வரை உணராத ஒரு உணர்வு வந்து விடுகிறது. மேலும் இந்த பாட்டிற்கு பக்க பலம் வைரமுத்து அவர்களின் வைர வரிகள் மற்றும் SPB . இவர்களை தவிர யாராலும் இது போன்ற ஒரு படைப்பை கொடுக்க முடியுமா என்பது சந்தேகமே !!! 


விஞ்ஞானி ரஜினிக்கும் தான் உருவாக்கிய எந்திரனுக்கும் இடையில் உள்ள உறவை வைரமுத்துவை விட எவராலும் இப்படி வர்ணிக்க முடியாது.

ரோபோ ரோபோ பல மொழிகள் கற்றாலும் என் தந்தை மொழி தமிழ் அல்லவா 
ரோபோ ரோபோ பல கண்டம் வென்றாலும் என் கர்த்தாவுக்கு அடிமை அல்லவா ! !

கருவில் பிறந்த எல்லாம் மரிக்கும் ; அறிவில் பிறந்தது மறிப்பதே இல்லை 


நான் இன்னொரு நாண்முகனே , நீ என்பவன் என் மகனே ; ஆண் பெற்றவன் ஆண் மகனே ஆம் உன் பெயர் எந்திரனே 

இந்த பாடலை கேட்கும் போது நமக்கே எந்திரனுடன் ஒரு பிணைப்பு ஏற்படுகிறது. ஷங்கர் கூறியதை போல ரகுமான் ஆஸ்காருக்கு 200 % தகுதியானவர் என்பதை இன்னொரு முறை உலகிற்கு நிருபித்திருக்கும் ஒரு பாடல்.


இந்த படத்தின் தன்மையை முழுதும் உணர்ந்து எழுதியிருக்கும் அருமையான வரிகளில்  வைரமுத்து அவர்களின்  உழைப்பு நம்மை வியப்பூட்டுகிறது. 

இந்த படத்தின் பாடல்களை ஒவ்வொரு முறை கேட்கும் போது ஒவ்வொரு பாடல் முதல் இடத்தை பிடிக்கிறது. எந்த பாடல் மிகவும் பிடித்திருக்கிறது என்று அனைவரையும் கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாடலை கூறுவதே இதற்கு ஒரு உதாரணம்.

மொத்தத்தில் ஒரு மிகவும் புதிய அனுபவத்தையும் சந்தோசத்தையும் கொடுத்த இந்த எந்திரன் குழுவிற்கு ஒரு royal salute. Superstar கூறியதை போல "Its going to be an experience" எந்திரன் படம் மட்டும் அல்ல பாடல்களும் ஒரு அனுபவம் தான். அதை வார்த்தைகளில் சொல்ல முடியாது நீங்களே உணருங்கள்.

இந்த பாடல்களை பற்றி மாற்றுக் கருத்து கொண்டவர்களுக்கு  நான் பதில் சொல்ல வேண்டியதில்லை உலகமே பதில் சொல்கிறது.

apple itunes report மற்றும் UK , US நாடுகளில் இருந்து கூட வரும் வரவேற்பு.


தமிழ் திரைபடத்தை உலக அளவிற்கு கொண்டு செல்லும் ஷங்கர் மற்றும் அவர் குழுவின் இந்த முயற்சியை இரு கரம் கூப்பி வரவேற்கலாம்.





ஷங்கர், ரகுமான் , வைரமுத்து , ஐஸ் இவற்றை எல்லாம் தாண்டி புது அவதாரம் எடுக்கும் நம் superstar ரஜினிகாந்த். U cant anything bigger than this. Eagerly waiting for the awesome experience on screen.

புதிய மனிதா சீக்கிரம் பூமிக்கு வா !!!!!!!!!!!!!!!!!!!   

Sunday, May 23, 2010

Kites - விமர்சனம்

Kites - விமர்சனம்

ரொம்ப நாள் படங்கள் இல்லாமல் நொந்து கெடந்ததால் இந்த வாரம் Double bonanza.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ரித்திக் ரோஷன் நடித்து அதிக செலவில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளி வந்திருக்கும் படம். பத்தாக்கொறைக்கு Barbara Mori வேறு.

படத்தின் கதை என்னமோ நமக்கு அதிகம் பழகிப் போன காதல் கதை தான். ஆனால் படத்தின் making totally different. பணத்திற்காக கிரீன் கார்டு வேண்டி தவிக்கும் பெண்களை திருமணம் செய்து அவர்களிடம் காசு வாங்குவது போன்ற வேலைகளை செய்து வரும் salsa instructor ரித்திக்,  அதே பணத்திற்காக தன்னை காதலிக்கும் ஒரு பெரிய casino owner பெண்ணின் காதலை ஏற்கிறார்.அதே போன்று காசுக்காக அந்த casino owner பையனை கல்யாணம் செய்யும் சூழ்நிலையில் இருக்கும் நாயகி Barbara Mori. இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட கடைசியில் என்ன  ஆனது என்பதை நிறைய சுறுசுறுப்புடனும் கொஞ்சம் அலுப்புடனும் காட்டி இருக்கிறார்கள்.

Kites - உயர பறக்கும் போது சில சமயம் நெருங்கி வரும் சில சமயம் விலகி போகும் ஒரு சமயம் கூடவே பயணிக்கும். இது போன்ற ஒரு உறவை சொல்லும் படம் என்று சொல்லி ஆரம்பிக்கும் படத்தை கொஞ்சம் interesting ஆக கொண்டு செல்வது கதை சொல்லிய விதம். straight narration ஆக இல்லாமல் அடி பட்டு ஒரு கூட்ஸ் வண்டியில் கிடக்கும் ஹீரோவை காட்டி ஆரம்பிக்கும் கதை பிளாஷ் பாக்கில் செல்கிறது. அதே போல் பல காட்சிகளுக்கு பதில் கொஞ்சம் நேரம் கழித்து கிடைப்பது இயக்குனரின் புத்திசாலித்தனம்.

படத்திற்கு உயிர் தருவது ரித்திக் ரோஷன், பார்பரா மோரி இவர்களது performance என்று சொல்லலாம். மிகவும் இயல்பான உயிரோட்டமான நடிப்பு. இதற்கு மேலும் பலம் சேர்ப்பது cinematographers, இயக்குனர் anurag basu சொல்ல நினைத்ததில் பாதியை தனது கேமரா மூலம் புத்திசாலிதனமாக சொல்லி விடுகிறார்கள். crystal clear cinematography. mexican desert ஆகட்டும் , போலீஸ் chasing காட்சிகளாகட்டும் பின்னி எடுத்திருக்கிறார்கள். ரித்திக்கின் உழைப்பு படம் முழுக்க தெரிகிறது.மிகவும் ஸ்மார்ட்டாக இருக்கிறார். ஆனால் அவர் salsa instructor ஆக வருவதால் அவரது dance பார்க்க ரொம்ப ஆவலாக இருந்தேன் ஆனால் ஒரு பாடல் தான் அதில் அநியாயத்துக்கு ஆடியிருப்பார் இருந்தாலும் நான் நிறைய எதிர்பார்த்தால் கொஞ்சம் ஏமாற்றம். அடுத்து பார்பரா மோரி spanish பேசிக் கொண்டு அலையும் ஹீரோயின் இருந்தாலும் பாதி காட்சியில் தனது expression மூலமே ஸ்கோர் செய்து விடுகிறார். இந்த கதாபத்திரதிற்கு நல்ல தேர்வு. இன்னொரு சொல்லிக்கொள்ளும் படியான character ரித்திக் நண்பனாக வருபவர். நல்ல characterisation. மற்றும் ஒரு கதாநாயகியான கங்கனா ரணட்டிர்ற்கு பெரிதாக எதுவும் வேலை இல்லை. 

இசை ராஜேஷ் ரோஷன். பாடல்கள் கிருஷ் அளவிற்கு இல்லை என்றாலும் மோசம் இல்லை. " Zindagi Do Pal Ki " மற்றும் suzanne, Hrithik பாடியிருக்கும் " Kites " தீம் நன்றாக இருந்தது. இதில் முதல் பாடல் எதோ ஒரு பழைய பாடலை நினைவு படுத்தினாலும் கேட்க நல்ல தான் இருக்கு.


படத்தில் ரசிக்கும் படியான இன்னொரு விஷயம் வசனங்கள். ஆங்கிலம் மட்டுமே தெரிந்த ஹீரோவும் ஸ்பானிஷ் மட்டுமே தெரிந்த ஹீரோயினும் திருமணம் செய்ய போகையில் அந்த ஊர் registraar நீங்கள் எப்படி காதலித்தீர்கள் என்று கேட்கையில் "  we fell in love with music" என்று ஹீரோ சொல்வார். அதே போன்று ஹீரோயின் ஒரு காட்சியில் கூறும் வசனம் " I dont know from which part of the world u r from but u r my world now ". வெறும் பணத்திற்காக இருவரும் ஒரு பணக்காரனின் வீட்டில் வேறு ஒருவரை திருமணம் செய்ய நிச்சயம் செய்த நிலையில் இவர்கள் சந்தித்து பேசும் போது நீ உண்மையிலேயே அவனை காதலிக்கிறாயா என்று கேட்கும் போது " No I love his money " என்பது போன்ற வசனங்கள் simple but sharp. இது போன்ற சின்ன சின்ன விஷயம் ரசிக்கும் படியாக இருந்தது.

உங்கள் மொழியில் எப்படி "  I Love you " சொல்வது என்று ஹீரோயின் கேட்கும் பொழுது இருவரும் தங்கள் தங்கள் மொழியில் தவறாக சொல்லி கொடுத்து விட அது தெரியாமல் மெக்சிகோவில் திருமணம் முடிந்த பின்பு ரித்திக் அனைவர் முன்பும் அதை சொல்லி மாட்டிக்கொள்ளும் கட்சி நன்றாக இருந்தது.

மொத்தத்தில் ஒரு நல்ல காதல் காவியத்தை கொஞ்சம் action கலந்து சொல்ல நினைத்திருக்கிறார்கள். என்ன இன்னும் கொஞ்சம் விறு விருப்புடன் சொல்லி இருக்கலாம். இரண்டாம் பாதி கொஞ்சம் தோய்வடைகின்றது. சில காட்சிகள்       யூகிக்கும் படியாக  இருப்பதும் இதற்கு ஒரு காரணம்.

Kites - Not up to the expectation but still worth the watch

Saturday, May 22, 2010

கொல கொலயா முந்திரிக்கா - விமர்சனம்

கொல கொலயா முந்திரிக்கா - விமர்சனம் 

 crazy மோகன் கதை வசனத்தில் மதுமிதாவின் இயக்கத்தில் ஏகப்பட்ட நடிகர்கள் பட்டாளத்தில் வந்திருக்கும் படம். இந்த படத்திற்கு போவதற்கு என்னை தூண்டிய ஒரே காரணம் crazy மோகன் தான்.

 

ஜமீன் பரம்பரைக்கு சொந்தமான சில வைரங்கள் பத்திரமாக மறைத்து வைக்கப்பட அதை தேடி அலையும் அந்த பரம்பரையில் வந்த ஆனந்தராஜ், மற்றும் பிறவி திருடர்களான ஹீரோ கார்த்திக்கும் ஹீரோயின் ஷிகாவும் இன்னும் இவர்களது எடுப்புகளும், இவர்களை சுற்றும் police inspector ஜெயராமும் என்ன ஆனார்கள் என்பது தான் கதை.

என்ன தான் சில இடங்களில் மொக்கை காமெடியாக இருந்தாலும் படம் முழுக்க சிரித்து ரசிக்கலாம் லாஜிக் எல்லாம் மறந்தால். அக்மார்க் crazy மோகன் வசனங்கள் இதிலும் எந்த குறையும் இல்லை. படத்தில் நிறைய நடிகர்கள் வந்தாலும் அனைவருமே காமெடியில் கலக்கி இருக்கிறார்கள். குறிப்பாக காமெடி timing பக்காவாக வரும் நடிகர்களான ஆனந்தராஜ், ஜெயராம், வாசு, டெல்லி கணேஷ், M.S. பாஸ்கர் ஆகியவர்கள் நல்ல கதாபாத்திர தேர்வு. ஆனந்தராஜ் போன்ற நடிகர்களை இன்னும் பயன்படுத்தலாம் நல்ல கதாபாத்திரங்கள் இருந்தால் என்று தோன்றுகிறது . மேலும் சில சின்ன சின்ன கதாபாத்திரங்கள் ரசிக்கும் படியாக இருந்தது. காதல் தாதாவாக சில நேரங்கள் வந்தாலும் நன்றாக செய்திருக்கிறார் ராதாரவி. ஹீரோயினுக்கும் ஹீரோவுக்கும் கிட்ட தட்ட சமமான வேடம். இயக்குனர் பெண்ணாக இருந்ததால் இந்த சம அந்தஸ்து தமிழ் படத்தில் அபூர்வமாக கிடைத்து விட்டது என்று நினைக்கிறேன். கார்த்திக் சில இடங்களில் சொதப்பினாலும் மொத்தத்தில் நன்றாகவே செய்திருக்கிறார். 

இடைவேளையின் போது திடீரென்று ஒரு surprise.  ஒரு ஹீரோ guest appearance. கிளைமாக்ஸ் காட்சியில் crazy மோகன் சிறு வேடத்தில் காது கேட்காத ஜட்ஜ் ஆக வருவது எவர் கிரீன் தலைவர் கவுண்டமணி ஒரு பழைய படத்தில் crazy மோகன் வசனத்தில் அவருடன் நடித்த, கோவை சரளா காது கேட்காத பெண்ணாக வரும் காமெடியை நியாபகப்படுதுகிறது  (அது தாங்க  அந்த " M.A. Philosophy " ).

படத்தில் கொஞ்சம் கூட சகிக்க முடியாத ஒரு விஷயம் பாடல்கள். பிண்ணனி இசையும் சொல்லிகொள்ளும் படியாக இல்லை. இசை வெண்ணிலா கபடி குழு படத்தின் இசை அமைப்பாளர் கணேஷ். அந்த படத்தில் அருமையான இரண்டு பாடல்களை கொடுத்தவர் இதில் என்னவோ ஏமாற்றி விட்டார். better luck next time.

மொத்தத்தில் ஒரு திரைப்படம் போல் இல்லாமல் ஒரு நல்ல crazy மோகன் drama பார்க்க விரும்புபவர்கள் இந்த படத்தை பார்க்கலாம். சுறா, எறா போன்றவைகளால் சாவதற்கு பதில் இது போன்ற படங்களை பார்க்கலாம்.

கொல கொலயா முந்திரிக்கா - just time pass with some healthy dialogue comedies from good performers.












 

Friday, April 9, 2010

மனதிற்கு இன்பம் தரும் இசை

பார்ப்பதற்கும், பின் அதை பற்றி எழுதுவதற்கும் நல்ல திரைப்படங்கள் எதுவும் வெளி  வராததால் (IPL புண்ணியத்தில்), (அங்காடி தெரு தவிர்த்து )என் மனதிற்கு பிடித்த ஆனால் மிகவும் பிரபலம் ஆகாத சில நல்ல பாடல்களை பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து இதோ ஆரம்பித்து விட்டேன் .

முதல் பாடல் : இள வேனிற்கால பஞ்சமி அவள் வானில் வந்த பௌர்ணமி 

பிரபு, மீனா நடித்த மனம் விரும்புதே உன்னை படத்தில் வரும் இந்த இனிய பாடல் என் "All time favourite" லிஸ்டில் ஒன்று . இசைஞானி இளையராஜாவின் அற்புதமான இசையில் பாடகர் ஹரிஹரன் மிகவும்  ரசித்து பாடியிருக்கும் ஒரு பாடல் இது . படம் ஒரு மகா மொக்க படம் என்பதால் கிடைக்க வேண்டிய உரிய அங்கீகாரம் இந்த பாட்டுக்கு கிடைக்காமல் போய்விட்டது என்றே  தோன்றுகிறது. ஒரு வேலை நல்ல படத்தில் வந்திருந்தால் இன்னும் அதிக பிரபலமாகியிருக்கும் இந்த பாடல். 


அம்மா இல்லாத ஒரு குழந்தையை வளர்க்கும் பிரபுவிடம் மீனா அதை பற்றி விசாரிக்கும் போது, அவர் தனது காதலியாக வாழ்வில் வந்து, பின் மனைவியாகவும், தாயாகவும் மாறி, பிறகு தன்னை விட்டு விட்டு இறந்து போன தனது மனைவியை பற்றி பாடுவதாக அமைந்த இந்த பாடலின் வரிகள் அனைத்தும் மிகவும் எழிமையாகவும் அதே சமயம் இசைக்கு ஏற்றார் போலவும் கவிதை நயத்துடனும் அமைந்தது இந்த பாடலின் இன்னொரு சிறப்பு.

"இள வேனிற்கால பஞ்சமி அவள் வானில் வந்த பௌர்ணமி சித்திர வானம் சித்திரம் தீட்டிடும் நேரம் ஒரு பத்தரை மாட்டு தங்க நிலாவை சந்தித்தேன்." என்று தொடங்கும் இந்த பாடலின் இசை மனதிற்கு இன்பம் தரும் வகையில் அமைந்திருக்கும். மேலும் இது போன்ற அற்புதமான வரிகளில் அமைந்திருக்கும்.

"தூக்கம் போனது அவளை நினைத்தே ஏக்கமானது பித்தனைப் போலானேன். பார்க்கும் இடமெல்லாம் அவளை போலே பாவை தெரிந்தது பைத்தியமாய் ஆனேன். என்னை போலே அவளும் இருந்தால் என்று அவள் சொல்ல கேட்டு அவள் சொல்லக் கேட்டு உள்ளம் எங்கோ போனது மீண்டும் மீண்டும் அவள் தான் வேண்டும் என்று என்னை  தூண்டும் உள்ளம் பச்சை கோடி காட்டுது. இது இன்று வந்த சொந்தமா இல்லை ஜென்ம ஜென்ம பந்தமா ? "

 தன்னை விட்டு பிரிந்து சென்றவள் விட்டு சென்ற சந்தோசமான நினைவுகளை நினைத்து நினைத்து ரசித்து பாடுவதாக அமைந்திருக்கும் இந்த பாடல் முடியும் வரிகள் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. திருமணம் ஆகி தனக்கு ஒரு துணையாக ஒரு குழந்தையை கொடுத்து விட்டு நினைவை விட்டு மட்டும் நீங்காமல் சென்றதை இப்படி எழுதியிருப்பார் கவிஞர்.

"மஞ்சள் குங்குமம் கொண்ட தேவதை எந்தன் நெஞ்சிலே மங்கள நாள் கொண்டால். திங்கள் ஆடிடும் வானம் போலவே எங்கள் வீட்டிலே மழலயைத்தான் தந்தாள். பாட வைத்து உள்ளம் ஆட வைத்து அன்பு பாட்டு சொல்லி வீட்டில் இன்பம் தந்தவள். தேட வைத்து நெஞ்சம் ஆட வைத்து என்னை சொகத்தீயில் வேக வைத்து போனவள். இந்த ஏழை என்னை மறந்தாள். எந்தன் ஜீவனுக்குள் கலந்தாள் "

இவ்வளவு பிடித்த ஒரு பாடலாக இருந்தாலும் இந்த பாடலை எழுதியவர் யார் என்று இன்னும் எனக்கு தெரியாது. தெரிந்தவர்கள் பகிர்ந்து விட்டு செல்லவும்.

குறிப்பு : இந்த பாடல் பார்ப்பதை விட கேட்பதற்கு தான் மிகவும் சிறந்த ஒன்று.

இதற்கு மேலும் இதை பற்றி பேசி உங்களை வெறுப்பேற்ற விரும்பவில்லை. கேட்டு பாருங்கள் நீங்களும் உணர்வீர்கள். இதோ பாடல் கேட்டு ரசிக்க :

http://musicmazaa.com/MMaPlayer/play/

பதிவிறக்கம் செய்ய :   http://w15.easy-share.com/8208221.html
 
பார்த்து ரசிக்க :

Sunday, March 14, 2010

விஜய் 3 Idiots - சில சந்தேகங்கள்

விஜய் 3 Idiots - சில சந்தேகங்கள்

ஹிந்தியில் டிசம்பரில் வெளி வந்து சக்கை போடு போட்ட ஒரு அருமையான திரைப்படமான 3 Idiots படத்தை தமிழில் டாக்டர் விஜய் செய்ய போவதாக ஒரு தகவல்  பரவி  வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியாத நிலையில் இது ஒரு வேலை நடந்தால் என்ன நடக்கும் என்ற எனது சந்தேகங்கள் ........

1. விஜய் கண்டிப்பாக ஆமிர் கான் கதாபாத்திரம் தான் வேண்டும் என்று சொல்வார் ( ஆமிர் கான் இடத்தில் விஜய் ??? ) என்றால் ஷார்மன் ஜோஷி மற்றும் மாதவன் வேடத்தில் யார் நடிப்பார்கள் ? விஜயின் அபிமான நடிகரான ஸ்ரீ மன்  ????? (மண்ணா போச்சு )

2 . ஆமிர் கான் படத்தில் ஒரு புத்திசாலியான மாணவன் . மேலும் engineering முடித்த  ஒரு scientist. அப்படியானால் நம் டாக்டர் விஜயும் புத்திசாலியான மாணவன்  ? (இனி  doctor + engineer விஜய் என்று போட்டு கொள்வர் போல )

3 . இந்த படத்தில் வரும் "all izz well " தமிழில் என்னவாக மாறும் ? ஒரு வேலை விஜய் தனது சிம்ம குரலில் " ங்கன்னா எல்லாம் நல்லயிருக்குங்கன்னா " என்று சொல்வார் போல . இல்லை " ங்கன்னா all izz well ங்கன்னா all izz well ங்கன்னா" என்றா ?

மேலே கூறிய அனைத்தையும் கொஞ்சம் நினைத்து பாருங்கள் . இது சும்மா சாம்பிள் தான் . மொத்த படமும் ஐயோ !!!!!!!!!!!!

நினைத்து பார்க்கவே எவ்வளவு கொடுமையாக இருக்கிறது. இது மட்டும் நடந்தால் .......

atleast சம்பந்தப்பட்டவர்கள் நினைத்து பார்ப்பார்களா ? யாராவது இந்த பேரழிவை தடுத்தால் நல்லது எனக்கு இல்லை சினிமா உலகிற்கே.

Saturday, February 20, 2010

My name is khan - விமர்சனம்

கரன் ஜோகர் இயக்கத்தில் பாலிவுட் கிங் ஷாருக்கான், கஜோல் இணைந்துள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் வந்திருக்கும் ஒரு திரைப்படம் - My name is khan.

சும்மா சொல்ல கூடாது எதிர்பார்த்ததை விட ஒரு மிக சிறந்த படத்தை கொடுத்திருக்கிறார்கள். அதை தான் collection report கூட பிரதிபலிக்கிறது.

எடுத்துக்கொண்ட கதை universally accepted one. அதை மிகவும் நேர்த்தியாக நல்ல technicians மற்றும் அதற்கேற்ற அனுபவமுள்ள திறமையான நடிகர்களை பயன்படுத்தி ஒரு அருமையான திரைபடத்தை கொடுத்துள்ளது  இந்த டீம் .

படத்தின் மைய கதை இது தான் "Not all muslims are terrorists" . இதை சிரத்தை மிக்க திரைகதையின் மூலம் சொல்லியிருக்கிறார்கள் நெத்தி பொட்டில் அடித்தாற்போல.

படத்தின் மிக பெரிய பலம் ஷாருக் கான் மற்றும் கஜோல். இருவரும் தங்கள் எதார்த்தமான நடிப்பின் மூலம் படத்தை தூக்கி நிறுத்துகின்றனர். கரன் ஜோஹரால் இதை போன்ற ஒரு அருமையான படத்தை கொடுக்க முடியும் என்று என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. hats off to him .  

முன்பு சில வருடங்கள் முன்பு cnn தொலைக்காட்சி devil's advocate நிகழ்ச்சியில் கரன் தப்பார் ஷாருக்கிடம் இப்படி ஒரு கேள்வியை கேட்டார் " sharukh only has five expressions when it comes to acting. nothing else? " என்று. அந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அன்று திணறினார் ஷாருக் . ஆனால் அதற்க்கான பதிலை இப்போது  My name is khan படத்தின் Rizvan Khan charecter மூலம் கொடுத்து விட்டார் என்றே நினைக்கிறன். ஷாருக் கான் இது வரை ஏற்ற கதாப்பாத்திரங்களிலேயே மிக சிறந்த ஒன்று என்றே இதை சொல்லலாம். " its a lifetime role that he will never forget neither we  ". கஜோல் போன்ற ஒரு திறமையான நடிகை இது போன்ற சில நல்ல கதாபத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடிப்பது வரவேற்க்கத்தக்க ஒன்று. இது போலவே தொடர வாழ்த்துக்கள். ஷாருக்குடன் வரும் காட்சியாகட்டும், தனது மகனுடன் விளையாடுவதாகட்டும் , இறந்த மகனை பார்த்து அழுவதாகட்டும் kajol has portrayed it brilliantly once again.

படத்தில் பாராட்ட பட வேண்டிய மேலும் சில பேர் ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் மற்றும் art department. ஒவ்வொரு காட்சியும் உலகத்தரம். ஜார்ஜியாவில் வரும் அந்த hurricane காட்சி மற்றும் அந்த church இவர்களின் உழைப்பிற்கு ஒரு சான்று. ரவி கே சந்திரன் அவர்களை தமிழ் திரையுலகம் இழந்து விட்டது என்றே நினைக்கிறன். மொத்தமாக bollywood அவரை குத்தகைக்கு எடுத்து விட்டது  போல. எங்கே இருந்தால் என்ன  அவர் செய்யும் படங்கள் எல்லாம் நல்ல படங்களாகவே இருக்கின்றன. அவரின் உழைப்பிற்கு மரியாதை கொடுக்க கூடிய நல்ல கதைகளையே தேர்ந்தெடுக்கிறார்  என்பதே சந்தோசமான விஷயம் தான்.

இசை - shankar ehsaan loy . எந்த விதத்திலும் படத்தை கெடுக்காமல் மேலும் பலம் சேர்க்கும் பின்னணி இசை. "hum hoonge kaamiyab" என்ற பழைய படலை நம்பிக்கையின் பிரதிபலிப்பாக படத்தில் சேர்த்துள்ளனர். "tere naina" "sajda" போன்ற பாடல்கள் இனிமையாக வருகின்றன படத்தில் பின்னணியில். "Allah hi rahem " பின்னணியில் சரியான இடத்தில் வருகிறது.

கரன் ஜோஹரின் உழைப்பு படம் முழிவதுமே பளிச்சிடுகிறது. ஒவ்வொரு விசயத்தையும் துல்லியமாக யோசித்து செய்திருக்கின்றனர். இந்த கதை நடக்கும் இடம் U.S. என்பதும் பல வரலாற்று சம்பவங்களை கொண்டே திரை கதை செய்திருப்பதும் தான் நாம் கதையை relate செய்து படத்துடன் ஒன்ற உதவுகிறது. மேலும் யாராலும் உணரக்கூடிய பளிச் வசனங்கள் மற்றும் காட்சிகள் இது போன்று :

1. Sharukh's message for the US president and others " My name is khan and I am not a terrorist ".

2. ஷாருக்கின் தாய் சிறு வயதிலேயே அவருக்கு சொல்லி கொடுக்கும் உண்மை " there are only two separations in this world good and bad. apart from that nothing else ".

என்னதான் இருந்தாலும் சில logic மீறல்கள் படத்தில் இருந்தாலும் நல்லவை மிக அதிகமாக இருப்பதால் இவை பெரிதாக தெரிய வில்லை. கரன் ஜோகர், ஷாருக்கான், கஜோல் இணைந்து நாம் மறக்க முடியாத ஒரு தரமான படத்தை கொடுத்துள்ளனர்.


 Bottom line : His name is khan and he is not a terrorist. So you can watch it without fear. Dont miss it.

Friday, January 29, 2010

கோவா - விமர்சனம்

ஏற்கனவே யாரும் எதிர்பார்க்காமல் இரண்டு வெற்றி படங்களை கொடுத்த வெங்கட் பிரபுவின் மூன்றாவது படம், ரஜினியின் மகள் சௌந்தர்யாவின் ஆக்கர் ஸ்டுடியோஸின் முதல் தயாரிப்பு என்ற எதிர்பார்ப்புடன் வந்திருக்கும் ஒரு திரைப்படம் - கோவா.

படத்தின் கதையை நான் கண்டிப்பாக சொல்ல போவதில்லை. ஏன் யாரும் சொல்ல முடியாது. அப்படி ஒன்று இருந்தால் தானே சொல்ல முடியும்.

ஏற்கனவே நாம் பல பழைய படங்களில் பார்த்த செண்டிமெண்ட் காட்சிகளை எல்லாம் நக்கல் செய்யும் விதத்தில் வரும் கிராமத்து காட்சிகளில் படம் தொடங்கும் போது ஆஹா வெங்கட் பிரபு மறுபடியும் கலக்க போறாருன்னு நெனச்சேன். அந்த காட்சிகளில் ஆனந்தராஜ் மனுஷன் dialogue delivery மற்றும் நக்கலில் பின்னி எடுத்திருக்கிறார். மொத்தம் ஒரு பத்து நிமிஷமே வந்தாலும் ரசிக்கும் படியாக இருக்கிறது. விஜய் குமார்  , சண்முக சுந்தரம் என அனைவரும் நன்றாக செய்திருக்கின்றனர்.

அதன் பிறகு தான் படத்தின் உண்மையான சொரூபம் தெரிந்தது. படத்தில் ரசிக்கும் படியாக சில பல காட்சிகள் இருந்தாலும் கதை என்று பேருக்காவது எதையாவது யோசித்து இருக்கலாம் என்று தோன்றுகிறது. அது இல்லாததால் தான் என்னவோ பல இடங்களில் மொக்கையாக இருக்கிறது.

படத்தில் இருக்கும் சில ரசிக்க முடிந்த விஷயங்கள் :

1 . நாம் ஏற்கனவே பார்த்த நமது படங்களை நக்கல் செய்திருக்கும் spoof comedy

2 . வைபவ் எதாவது பெண்ணை செட் செய்து விட்டால் அவர் முகத்தில் லைட் அடித்து பீ ஜி எம்மில் வரும் சின்ன விடு படத்தின் "நாகிர்தனா " தீம் மியூசிக்.

3  . பிரேம் ஜிக்கு பீ ஜி எம்மில் வரும் 'கண்கள் இரண்டால் " பாடலும் அதில் தலையை ஆட்டி ஆட்டி அவர் ஜெய்யை imitate செய்வது .

4  பிரேம் ஜியின் காதலியாக வரும் அந்த foreign பொண்ணு அழகோ அழகு.

கிளைமாக்ஸ் surprise  நன்றாக இருந்தது .

படத்தில் இருக்கும் இன்னொரு நல்ல விஷயம் யுவன் ஷங்கர் ராஜா . பாடல்கள் அனைத்துமே ஏற்கனவே ஹிட். ஏழேழு தலைமுறைக்கும் பாடல் கங்கை அமரனின்  எதார்த்தமான வரிகளில் பண்ணைபுர வாரிசுகள் மிகவும் ரசித்து பாடியிருக்கின்றனர். அன்ட்ரியாவும் விஜய் டிவி சூப்பர் சிங்கரின் வெற்றியாளரான அஜீஷும்  பாடியிருக்கும் "இது வரை இல்லாத உணர்விது " பாடல் அருமையான மெலடி என்றால் இசைஞானி இளையராஜா , எஸ் பி பி அவர்கள் மற்றும் சித்ரா அவர்களின் பிரம்மண்டமான கூட்டணியில் வரும் "வாலிபா வா வா " பாடல் கேட்கும் போது மிகவும் பிடித்த பாடல். ஆனால் அந்த பாடலை இதை விட கேவலமான ஒரு சிட்டுவேசனில் படத்தில் யாராலும் சேர்க்க முடியாது. என்ன கொடுமை சார் இது .

படத்தில் சகிக்கவே முடியாத சில விஷயங்கள் :

சம்பத் character மற்றும் அரவிந்த் சம்பத் சம்பத்தப்பட்ட காட்சிகள் .
சினேஹா - வைபவ் flashback மற்றும் அந்த கப்பல் காட்சிகள் செம மொக்கை.

மொத்தத்தில் சௌந்தர்யா ரஜினிகாந்தின் புண்ணியத்தில் மொத்த டீமும் வெங்கட் பிரபுவின் holiday கோவாவில் கொண்டாடி இருக்கின்றனர் .கோவா எப்படி எல்லாம் இருக்கும் என்பதை மட்டும் நமக்கு காட்டி இருக்கின்றனர். கொஞ்சம் கதையையும் சிந்தித்து இருக்கலாம் என்று தொன்றுகிறது.

bottomline : கோவா படத்திற்கு சென்றதற்கு பதில் இன்னும் கொஞ்சம் செலவு செய்து கோவாவிற்கே போய் அதை பார்த்திருக்கலாம்.

என் கருத்துக்களை நீங்கள் அறிய இங்கே கொடுத்துள்ளேன். உங்கள் கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள இங்கே  பதிவு செய்யவும்.

Thursday, January 14, 2010

ஆயிரத்தில் ஒருவன் - விமர்சனம்

ஆயிரத்தில் ஒருவன்

செல்வராகவன் இயக்கத்தில் பருத்தி வீரன் கார்த்தி நடிக்கும் படம். trailor பார்த்தே மிரண்டு போய் படத்திற்கு சென்றேன் மிகுந்த எதிர்பார்ப்புடன். கொஞ்சம் ஏமாற்றி தான் விட்டார்கள் .

சோழர்கள் பாண்டியர்களிடம் இருந்து தப்பி செல்லும் போது அவர்களின் பொக்கிஷமான ஒரு சிலையும் எடுத்து சென்று விடுகின்றனர். அவர்கள் இருக்கும் இடத்தை யாரும் கண்டு பிடிக்க முடியாது இருக்க எட்டு வகையான ஆபத்துக்களை  உருவாக்கி வைத்திருக்கின்றனர் . அந்த சோழர்கள் இருந்த இடத்தை தேடி செல்லும் ஒரு பயணத்தில் அந்த ஆபத்துக்களை எல்லாம் எதிர் கொண்டு கடந்து சென்றால் அங்கு அவரகளுக்கு ஒரு அதிர்ச்சி காத்து இருக்கிறது .  சோழர்கள் என்ன ஆனார்கள் ? என்ன நடந்தது ? என்பதை கொஞ்சம் விறுவிறுப்புடனும் கொஞ்சம் கடுப்புடனும் காட்டி இருக்கின்றனர் .

ரீமா சென் தலைமையில் செல்லும் அந்த குழுவிற்கு உதவியாளர்களாக வருபவர்களின் தலைவனாக கார்த்தி . சும்மா சொல்ல கூடாது கார்த்தி கலக்கி இருக்கிறார் தனது dialogue delivery மற்றும் body language மூலம். பருத்தி வீரனில் இருந்த அதே வகையான நக்கல் பேச்சுடன் அறிமுகமாகும் அவரின் அட்டகாசம் முதல் பாதியை கலகலப்புடன் கொண்டு செல்கிறது . வித விதமான ஆபத்துக்களை அவர்கள் கடந்து செல்வதும் , அடுத்து என்ன நடக்க போகிறது என்ற எதிர்பார்ப்பும் முதல் பாதியை விறு விறுப்பாகவே கொண்டு செல்கிறது. இருந்தாலும் இரண்டாவது பாதியில் என்ன செய்வது என்று தெரியாமல் பல விசயங்களை சொல்ல முயற்சி செய்து அறை குறையாக முடிகிறது படம் .

சோழர்களின் அரசனாக பார்த்திபன் பல இடங்களில் முதிர்ந்த நடிப்பை காட்டினாலும் மோசமான திரை கதையினால் சில இடங்களில் (உதாரணமாக ரீமா சென்னுடன் போடும் சண்டை ) எடுபடாமல் போய் விட்டது .

இசை ஜி வி பிரகாஷ் . படால்கள் ஏற்கனவே hit ஆகியிருந்தாலும் படத்தில் தேவை இல்லாத இடத்தில் வந்து தொலைக்கின்றன. இரண்டு பாடல்களை தவிர . "உன் மேல ஆச தான் " பாடல் அட்டகசபடுத்தும் விதம் என்றாலும் மனதில் நிற்கும் பாடல் விஜய் ஜேசுதாஸ் மற்றும் நித்ய ஸ்ரீ பாடிய "தாய் தின்ற மண்ணே " பாடல் தான் .

இப்படிப்பட்ட ஒரு வித்யாசமான முயற்சியை செய்ததற்காக செல்வ ராகவனை பாராட்டினாலும் அதை ஒழுங்காக அவர் செய்து முடிக்க வில்லை என்றே சொல்ல வேண்டும் . மொத்த பட குழுவும் பட்ட கஷ்டம் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது . முக்கியமாக செல்வா சொல்லியதை போல junior artists மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறார்கள் மற்றும் ஒளிப்பதிவாளர் .

படம் முழுவதும் தெரியும் உயிரோட்டமாக திரியும்  இன்னொரு விஷயம்  வைரமுத்து அவர்களின் வைர வரிகள் . மிகவும் உழைத்திருக்கிறார் அவர் . பாதி படத்தின் வசனங்களை திரை அரங்கில் சில பேர்  தமிழ் அல்லாத வேற்று மொழியை போல் திரு திருவென விழித்து பார்க்கின்றனர். சோழர்கள் உண்மையிலேயே எந்த விதத்தில் பேசி  இருப்பார்கள் என்று பெரிய ஆராய்ச்சியே செய்து வரிகளை எழுதியிருக்கிறார் மனுஷன்.

செல்வா படம் என்பதை அண்ட்ரியா மற்றும் ரீமா சென் வருவதை வைத்து தான் கண்டு பிடிக்க முடிகிறது . அவரின் மற்ற படங்களில் இருந்த தெளிவான திரை கதை இந்த படத்தில் missing .

சில ஆபத்துக்களை அநியாயத்துக்கு சிந்தித்து அற்புதமாக graphics செய்திருந்தாலும் (சிவனின் நிழல் மூலம் தப்பிக்கும் காட்சி ) மேலும் சில வற்றை மொக்கையான graphics கொண்டு செய்திருக்கிறார்கள் (தண்ணீரில் வரும் ஆபத்து ). படத்தின் highlight சிவனின் நிழல் மூலம் தப்பிக்கும் காட்சி மற்றும் போர் காட்சிகள் .

ஆயிரத்தில் ஒருவருக்கு வரும் தைரியத்துடன் இந்த மாதிரி ஒரு கதையை,  படத்தை தொடங்கிய செல்வா நிறைய இடத்தில் கோட்டை விட்டு விட்டார் என்றே தெரிகிறது . மொத்தத்தில் நிறைய எதிர்பார்த்து சென்ற  எனக்கு என்னமோ இந்த படம் கொஞ்சம் ஏமாற்றம் தான் .


இன்று என்னுடன்  பொங்கலுக்கு கூட வீட்டில் இல்லாமல் திரை அரங்கில் முதல் கட்சியை பார்க்க சென்று திருப்தி இல்லாமல்  வீடு திரும்பிய  ஆயிரத்தில் ஒருவன்
ROBOT