Friday, January 29, 2010

கோவா - விமர்சனம்

ஏற்கனவே யாரும் எதிர்பார்க்காமல் இரண்டு வெற்றி படங்களை கொடுத்த வெங்கட் பிரபுவின் மூன்றாவது படம், ரஜினியின் மகள் சௌந்தர்யாவின் ஆக்கர் ஸ்டுடியோஸின் முதல் தயாரிப்பு என்ற எதிர்பார்ப்புடன் வந்திருக்கும் ஒரு திரைப்படம் - கோவா.

படத்தின் கதையை நான் கண்டிப்பாக சொல்ல போவதில்லை. ஏன் யாரும் சொல்ல முடியாது. அப்படி ஒன்று இருந்தால் தானே சொல்ல முடியும்.

ஏற்கனவே நாம் பல பழைய படங்களில் பார்த்த செண்டிமெண்ட் காட்சிகளை எல்லாம் நக்கல் செய்யும் விதத்தில் வரும் கிராமத்து காட்சிகளில் படம் தொடங்கும் போது ஆஹா வெங்கட் பிரபு மறுபடியும் கலக்க போறாருன்னு நெனச்சேன். அந்த காட்சிகளில் ஆனந்தராஜ் மனுஷன் dialogue delivery மற்றும் நக்கலில் பின்னி எடுத்திருக்கிறார். மொத்தம் ஒரு பத்து நிமிஷமே வந்தாலும் ரசிக்கும் படியாக இருக்கிறது. விஜய் குமார்  , சண்முக சுந்தரம் என அனைவரும் நன்றாக செய்திருக்கின்றனர்.

அதன் பிறகு தான் படத்தின் உண்மையான சொரூபம் தெரிந்தது. படத்தில் ரசிக்கும் படியாக சில பல காட்சிகள் இருந்தாலும் கதை என்று பேருக்காவது எதையாவது யோசித்து இருக்கலாம் என்று தோன்றுகிறது. அது இல்லாததால் தான் என்னவோ பல இடங்களில் மொக்கையாக இருக்கிறது.

படத்தில் இருக்கும் சில ரசிக்க முடிந்த விஷயங்கள் :

1 . நாம் ஏற்கனவே பார்த்த நமது படங்களை நக்கல் செய்திருக்கும் spoof comedy

2 . வைபவ் எதாவது பெண்ணை செட் செய்து விட்டால் அவர் முகத்தில் லைட் அடித்து பீ ஜி எம்மில் வரும் சின்ன விடு படத்தின் "நாகிர்தனா " தீம் மியூசிக்.

3  . பிரேம் ஜிக்கு பீ ஜி எம்மில் வரும் 'கண்கள் இரண்டால் " பாடலும் அதில் தலையை ஆட்டி ஆட்டி அவர் ஜெய்யை imitate செய்வது .

4  பிரேம் ஜியின் காதலியாக வரும் அந்த foreign பொண்ணு அழகோ அழகு.

கிளைமாக்ஸ் surprise  நன்றாக இருந்தது .

படத்தில் இருக்கும் இன்னொரு நல்ல விஷயம் யுவன் ஷங்கர் ராஜா . பாடல்கள் அனைத்துமே ஏற்கனவே ஹிட். ஏழேழு தலைமுறைக்கும் பாடல் கங்கை அமரனின்  எதார்த்தமான வரிகளில் பண்ணைபுர வாரிசுகள் மிகவும் ரசித்து பாடியிருக்கின்றனர். அன்ட்ரியாவும் விஜய் டிவி சூப்பர் சிங்கரின் வெற்றியாளரான அஜீஷும்  பாடியிருக்கும் "இது வரை இல்லாத உணர்விது " பாடல் அருமையான மெலடி என்றால் இசைஞானி இளையராஜா , எஸ் பி பி அவர்கள் மற்றும் சித்ரா அவர்களின் பிரம்மண்டமான கூட்டணியில் வரும் "வாலிபா வா வா " பாடல் கேட்கும் போது மிகவும் பிடித்த பாடல். ஆனால் அந்த பாடலை இதை விட கேவலமான ஒரு சிட்டுவேசனில் படத்தில் யாராலும் சேர்க்க முடியாது. என்ன கொடுமை சார் இது .

படத்தில் சகிக்கவே முடியாத சில விஷயங்கள் :

சம்பத் character மற்றும் அரவிந்த் சம்பத் சம்பத்தப்பட்ட காட்சிகள் .
சினேஹா - வைபவ் flashback மற்றும் அந்த கப்பல் காட்சிகள் செம மொக்கை.

மொத்தத்தில் சௌந்தர்யா ரஜினிகாந்தின் புண்ணியத்தில் மொத்த டீமும் வெங்கட் பிரபுவின் holiday கோவாவில் கொண்டாடி இருக்கின்றனர் .கோவா எப்படி எல்லாம் இருக்கும் என்பதை மட்டும் நமக்கு காட்டி இருக்கின்றனர். கொஞ்சம் கதையையும் சிந்தித்து இருக்கலாம் என்று தொன்றுகிறது.

bottomline : கோவா படத்திற்கு சென்றதற்கு பதில் இன்னும் கொஞ்சம் செலவு செய்து கோவாவிற்கே போய் அதை பார்த்திருக்கலாம்.

என் கருத்துக்களை நீங்கள் அறிய இங்கே கொடுத்துள்ளேன். உங்கள் கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள இங்கே  பதிவு செய்யவும்.

Thursday, January 14, 2010

ஆயிரத்தில் ஒருவன் - விமர்சனம்

ஆயிரத்தில் ஒருவன்

செல்வராகவன் இயக்கத்தில் பருத்தி வீரன் கார்த்தி நடிக்கும் படம். trailor பார்த்தே மிரண்டு போய் படத்திற்கு சென்றேன் மிகுந்த எதிர்பார்ப்புடன். கொஞ்சம் ஏமாற்றி தான் விட்டார்கள் .

சோழர்கள் பாண்டியர்களிடம் இருந்து தப்பி செல்லும் போது அவர்களின் பொக்கிஷமான ஒரு சிலையும் எடுத்து சென்று விடுகின்றனர். அவர்கள் இருக்கும் இடத்தை யாரும் கண்டு பிடிக்க முடியாது இருக்க எட்டு வகையான ஆபத்துக்களை  உருவாக்கி வைத்திருக்கின்றனர் . அந்த சோழர்கள் இருந்த இடத்தை தேடி செல்லும் ஒரு பயணத்தில் அந்த ஆபத்துக்களை எல்லாம் எதிர் கொண்டு கடந்து சென்றால் அங்கு அவரகளுக்கு ஒரு அதிர்ச்சி காத்து இருக்கிறது .  சோழர்கள் என்ன ஆனார்கள் ? என்ன நடந்தது ? என்பதை கொஞ்சம் விறுவிறுப்புடனும் கொஞ்சம் கடுப்புடனும் காட்டி இருக்கின்றனர் .

ரீமா சென் தலைமையில் செல்லும் அந்த குழுவிற்கு உதவியாளர்களாக வருபவர்களின் தலைவனாக கார்த்தி . சும்மா சொல்ல கூடாது கார்த்தி கலக்கி இருக்கிறார் தனது dialogue delivery மற்றும் body language மூலம். பருத்தி வீரனில் இருந்த அதே வகையான நக்கல் பேச்சுடன் அறிமுகமாகும் அவரின் அட்டகாசம் முதல் பாதியை கலகலப்புடன் கொண்டு செல்கிறது . வித விதமான ஆபத்துக்களை அவர்கள் கடந்து செல்வதும் , அடுத்து என்ன நடக்க போகிறது என்ற எதிர்பார்ப்பும் முதல் பாதியை விறு விறுப்பாகவே கொண்டு செல்கிறது. இருந்தாலும் இரண்டாவது பாதியில் என்ன செய்வது என்று தெரியாமல் பல விசயங்களை சொல்ல முயற்சி செய்து அறை குறையாக முடிகிறது படம் .

சோழர்களின் அரசனாக பார்த்திபன் பல இடங்களில் முதிர்ந்த நடிப்பை காட்டினாலும் மோசமான திரை கதையினால் சில இடங்களில் (உதாரணமாக ரீமா சென்னுடன் போடும் சண்டை ) எடுபடாமல் போய் விட்டது .

இசை ஜி வி பிரகாஷ் . படால்கள் ஏற்கனவே hit ஆகியிருந்தாலும் படத்தில் தேவை இல்லாத இடத்தில் வந்து தொலைக்கின்றன. இரண்டு பாடல்களை தவிர . "உன் மேல ஆச தான் " பாடல் அட்டகசபடுத்தும் விதம் என்றாலும் மனதில் நிற்கும் பாடல் விஜய் ஜேசுதாஸ் மற்றும் நித்ய ஸ்ரீ பாடிய "தாய் தின்ற மண்ணே " பாடல் தான் .

இப்படிப்பட்ட ஒரு வித்யாசமான முயற்சியை செய்ததற்காக செல்வ ராகவனை பாராட்டினாலும் அதை ஒழுங்காக அவர் செய்து முடிக்க வில்லை என்றே சொல்ல வேண்டும் . மொத்த பட குழுவும் பட்ட கஷ்டம் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது . முக்கியமாக செல்வா சொல்லியதை போல junior artists மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறார்கள் மற்றும் ஒளிப்பதிவாளர் .

படம் முழுவதும் தெரியும் உயிரோட்டமாக திரியும்  இன்னொரு விஷயம்  வைரமுத்து அவர்களின் வைர வரிகள் . மிகவும் உழைத்திருக்கிறார் அவர் . பாதி படத்தின் வசனங்களை திரை அரங்கில் சில பேர்  தமிழ் அல்லாத வேற்று மொழியை போல் திரு திருவென விழித்து பார்க்கின்றனர். சோழர்கள் உண்மையிலேயே எந்த விதத்தில் பேசி  இருப்பார்கள் என்று பெரிய ஆராய்ச்சியே செய்து வரிகளை எழுதியிருக்கிறார் மனுஷன்.

செல்வா படம் என்பதை அண்ட்ரியா மற்றும் ரீமா சென் வருவதை வைத்து தான் கண்டு பிடிக்க முடிகிறது . அவரின் மற்ற படங்களில் இருந்த தெளிவான திரை கதை இந்த படத்தில் missing .

சில ஆபத்துக்களை அநியாயத்துக்கு சிந்தித்து அற்புதமாக graphics செய்திருந்தாலும் (சிவனின் நிழல் மூலம் தப்பிக்கும் காட்சி ) மேலும் சில வற்றை மொக்கையான graphics கொண்டு செய்திருக்கிறார்கள் (தண்ணீரில் வரும் ஆபத்து ). படத்தின் highlight சிவனின் நிழல் மூலம் தப்பிக்கும் காட்சி மற்றும் போர் காட்சிகள் .

ஆயிரத்தில் ஒருவருக்கு வரும் தைரியத்துடன் இந்த மாதிரி ஒரு கதையை,  படத்தை தொடங்கிய செல்வா நிறைய இடத்தில் கோட்டை விட்டு விட்டார் என்றே தெரிகிறது . மொத்தத்தில் நிறைய எதிர்பார்த்து சென்ற  எனக்கு என்னமோ இந்த படம் கொஞ்சம் ஏமாற்றம் தான் .


இன்று என்னுடன்  பொங்கலுக்கு கூட வீட்டில் இல்லாமல் திரை அரங்கில் முதல் கட்சியை பார்க்க சென்று திருப்தி இல்லாமல்  வீடு திரும்பிய  ஆயிரத்தில் ஒருவன்
ROBOT