Thursday, January 14, 2010

ஆயிரத்தில் ஒருவன் - விமர்சனம்

ஆயிரத்தில் ஒருவன்

செல்வராகவன் இயக்கத்தில் பருத்தி வீரன் கார்த்தி நடிக்கும் படம். trailor பார்த்தே மிரண்டு போய் படத்திற்கு சென்றேன் மிகுந்த எதிர்பார்ப்புடன். கொஞ்சம் ஏமாற்றி தான் விட்டார்கள் .

சோழர்கள் பாண்டியர்களிடம் இருந்து தப்பி செல்லும் போது அவர்களின் பொக்கிஷமான ஒரு சிலையும் எடுத்து சென்று விடுகின்றனர். அவர்கள் இருக்கும் இடத்தை யாரும் கண்டு பிடிக்க முடியாது இருக்க எட்டு வகையான ஆபத்துக்களை  உருவாக்கி வைத்திருக்கின்றனர் . அந்த சோழர்கள் இருந்த இடத்தை தேடி செல்லும் ஒரு பயணத்தில் அந்த ஆபத்துக்களை எல்லாம் எதிர் கொண்டு கடந்து சென்றால் அங்கு அவரகளுக்கு ஒரு அதிர்ச்சி காத்து இருக்கிறது .  சோழர்கள் என்ன ஆனார்கள் ? என்ன நடந்தது ? என்பதை கொஞ்சம் விறுவிறுப்புடனும் கொஞ்சம் கடுப்புடனும் காட்டி இருக்கின்றனர் .

ரீமா சென் தலைமையில் செல்லும் அந்த குழுவிற்கு உதவியாளர்களாக வருபவர்களின் தலைவனாக கார்த்தி . சும்மா சொல்ல கூடாது கார்த்தி கலக்கி இருக்கிறார் தனது dialogue delivery மற்றும் body language மூலம். பருத்தி வீரனில் இருந்த அதே வகையான நக்கல் பேச்சுடன் அறிமுகமாகும் அவரின் அட்டகாசம் முதல் பாதியை கலகலப்புடன் கொண்டு செல்கிறது . வித விதமான ஆபத்துக்களை அவர்கள் கடந்து செல்வதும் , அடுத்து என்ன நடக்க போகிறது என்ற எதிர்பார்ப்பும் முதல் பாதியை விறு விறுப்பாகவே கொண்டு செல்கிறது. இருந்தாலும் இரண்டாவது பாதியில் என்ன செய்வது என்று தெரியாமல் பல விசயங்களை சொல்ல முயற்சி செய்து அறை குறையாக முடிகிறது படம் .

சோழர்களின் அரசனாக பார்த்திபன் பல இடங்களில் முதிர்ந்த நடிப்பை காட்டினாலும் மோசமான திரை கதையினால் சில இடங்களில் (உதாரணமாக ரீமா சென்னுடன் போடும் சண்டை ) எடுபடாமல் போய் விட்டது .

இசை ஜி வி பிரகாஷ் . படால்கள் ஏற்கனவே hit ஆகியிருந்தாலும் படத்தில் தேவை இல்லாத இடத்தில் வந்து தொலைக்கின்றன. இரண்டு பாடல்களை தவிர . "உன் மேல ஆச தான் " பாடல் அட்டகசபடுத்தும் விதம் என்றாலும் மனதில் நிற்கும் பாடல் விஜய் ஜேசுதாஸ் மற்றும் நித்ய ஸ்ரீ பாடிய "தாய் தின்ற மண்ணே " பாடல் தான் .

இப்படிப்பட்ட ஒரு வித்யாசமான முயற்சியை செய்ததற்காக செல்வ ராகவனை பாராட்டினாலும் அதை ஒழுங்காக அவர் செய்து முடிக்க வில்லை என்றே சொல்ல வேண்டும் . மொத்த பட குழுவும் பட்ட கஷ்டம் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது . முக்கியமாக செல்வா சொல்லியதை போல junior artists மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறார்கள் மற்றும் ஒளிப்பதிவாளர் .

படம் முழுவதும் தெரியும் உயிரோட்டமாக திரியும்  இன்னொரு விஷயம்  வைரமுத்து அவர்களின் வைர வரிகள் . மிகவும் உழைத்திருக்கிறார் அவர் . பாதி படத்தின் வசனங்களை திரை அரங்கில் சில பேர்  தமிழ் அல்லாத வேற்று மொழியை போல் திரு திருவென விழித்து பார்க்கின்றனர். சோழர்கள் உண்மையிலேயே எந்த விதத்தில் பேசி  இருப்பார்கள் என்று பெரிய ஆராய்ச்சியே செய்து வரிகளை எழுதியிருக்கிறார் மனுஷன்.

செல்வா படம் என்பதை அண்ட்ரியா மற்றும் ரீமா சென் வருவதை வைத்து தான் கண்டு பிடிக்க முடிகிறது . அவரின் மற்ற படங்களில் இருந்த தெளிவான திரை கதை இந்த படத்தில் missing .

சில ஆபத்துக்களை அநியாயத்துக்கு சிந்தித்து அற்புதமாக graphics செய்திருந்தாலும் (சிவனின் நிழல் மூலம் தப்பிக்கும் காட்சி ) மேலும் சில வற்றை மொக்கையான graphics கொண்டு செய்திருக்கிறார்கள் (தண்ணீரில் வரும் ஆபத்து ). படத்தின் highlight சிவனின் நிழல் மூலம் தப்பிக்கும் காட்சி மற்றும் போர் காட்சிகள் .

ஆயிரத்தில் ஒருவருக்கு வரும் தைரியத்துடன் இந்த மாதிரி ஒரு கதையை,  படத்தை தொடங்கிய செல்வா நிறைய இடத்தில் கோட்டை விட்டு விட்டார் என்றே தெரிகிறது . மொத்தத்தில் நிறைய எதிர்பார்த்து சென்ற  எனக்கு என்னமோ இந்த படம் கொஞ்சம் ஏமாற்றம் தான் .


இன்று என்னுடன்  பொங்கலுக்கு கூட வீட்டில் இல்லாமல் திரை அரங்கில் முதல் கட்சியை பார்க்க சென்று திருப்தி இல்லாமல்  வீடு திரும்பிய  ஆயிரத்தில் ஒருவன்
ROBOT

15 comments:

நாஞ்சில் பிரதாப் said...

che enna thaliva ippadi solteenga... oru thadavai paarkalaamla..

ராஜேந்திரன் said...

நல்ல விமர்சனம் பாஸ்

டம்பி மேவீ said...

ennanga...neenga ippudi solluringa...vera oruthar vera madiri solluraru....

padam parkkalamaaa vendaamaa

ROBOT said...

//டம்பி மேவீ said...

ennanga...neenga ippudi solluringa...vera oruthar vera madiri solluraru....

padam parkkalamaaa vendaamaa
//

ஒரு முறை கண்டிப்பாக பார்க்கலாம் . பார்க்க முடியாத அளவுக்கு நிச்சயம் இல்லை . எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்ய வில்லை.அதை தான் சொன்னேன்.
முதல் பாதி அருமை. இரண்டாம் பாதியில் கொஞ்சம் கோட்டை விட்டு விட்டார்கள் .

ROBOT said...

@நாஞ்சில் பிரதாப்
ஒரு முறை கண்டிப்பாக பார்க்கலாம்.கண்டிப்பாக மோசமான படம் இல்லை . ஆனால் இன்னும் கொஞ்சம் நன்றாக செய்திருக்கலாம் . எனக்கு பிடித்த இயகுனர்களுள் ஒருவர் என்பதால் கொஞ்சம் செல்வாவிடம் நிறைய எதிர்பார்த்தேன். அதனால் ஏமாற்றம். வேறொன்றும் இல்லை.

ROBOT said...

@ராஜேந்திரன்
வருகைக்கு நன்றி.

தர்ஷன் said...

//சோழர்களின் அரசனாக பார்த்திபன் பல இடங்களில் முதிர்ந்த நடிப்பை காட்டினாலும் மோசமான திரை கதையினால் சில இடங்களில் (உதாரணமாக ரீமா சென்னுடன் போடும் சண்டை ) எடுபடாமல் போய் விட்டது .//


நாமே இவ்வளவு யோசிக்கும் போது செல்வராகவன் யோசிக்காமல் இருந்திருப்பாரா? திரைக்கதையின் தொய்வில் நிதிப் பிரச்சினையும் காலமும் செல்வாக்கு செலுத்தியிருக்கக் கூடும்.

குப்பன்.யாஹூ said...

NICE POST.LIKE PAUTHI VEERAN THIS WILL ALSO BE LATE PICK UP

ROBOT said...

//நாமே இவ்வளவு யோசிக்கும் போது செல்வராகவன் யோசிக்காமல் இருந்திருப்பாரா? திரைக்கதையின் தொய்வில் நிதிப் பிரச்சினையும் காலமும் செல்வாக்கு செலுத்தியிருக்கக் கூடும்.//
கண்டிப்பாக அது தான் காரணமாக இருக்கும் என நினைகிறேன்

ROBOT said...

@ குப்பன்.யாஹூ

வருகைக்கு நன்றி.

மாயோன் ! said...

படம் பார்த்தவர்களுக்காக மட்டும் எழுதி இருக்கிறேன்.. பார்த்தவர்கள் மட்டும் மேலே படிக்கவும்..

ஒரு மொக்கை கதையை இவ்வளவு கஷ்டப்பட்டு எடுக்க படக்குழுவினர் அரைகுறைகள் இல்லை..

சொல்லவந்த உருக்கமான உறையவைக்கும் கதையை மேலே மெழுகு தடவி.. விறுவிறுப்பு ஏற்ற சில அம்புலிமாமா டைப் வியுக அலங்காரங்கள் சேர்த்து சொல்லி இருக்கிறார்கள்..

கதை இது தான்..

கடுமையான போரில் தமது மண்ணை இழந்த கூட்டம் ஒன்று என்றாவது தாயகம் திரும்புவோம் என்ற நம்பிக்கையை உணவாக்கி கண்காணாத இடத்தில் பதுங்கி கிடக்கிறது.. தாயகம் திரும்ப வேண்டிய வழியை உரைக்க - தூது வரும் - என்றுகாத்துக்கொண்டு தம்மை சுற்றி பாதுகாப்பு அரண் ஏற்படுத்திகொண்டு வாழ்கிறது..

யாரும் சுலபமாக அவர்களை நெருங்கி விட முடியாது.. நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக தூது ஒன்று வந்து சேர்கிறது.. அந்த தூது சொல்லவதை நம்பி மறைவிடம் விட்டு வெளியேறியபின் தான் தெரிகிறது -தலைமை துரோகிகளிடம் ஏமாந்துவிட்டது என்று..

அசுர பலமும், சர்வ வல்லமையும் கொண்ட எதிரிகளிடம் நடக்கும் பொருந்தாத போரில் மோதி.. கடைசி வரை போராடுகிறார்கள்.. இழப்பு..இழப்பு.. தாங்கமுடியாத இழப்பு.. இறுதியில் தோற்று சிறை எடுக்கப்பட்டு அவமான படுத்தப்பட்டு.. தலைவன் இறக்கின்றான்.. தலைமை அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டு அடுத்தகட்ட போராட்டததுக்கான நம்பிக்கை விதைக்கப்படுவதுடன் முடிகிறது கதை..

எல்லோரும் சொல்வது போல அவ்வளவு விறுவிறு முன்பாதி தந்த இயக்குனருக்கு.. பின்பாதி இப்படி தர என்ன அவசியம்?

முதல் பாதி நம்மை ஆயத்தப்படுத்த வரும் விறுவிறு/துருதுரு அட்டைப் படம் / முன்னுரை..
இரண்டாம் பாதி தான் சொல்லவந்த கதை..

பட ஆரம்பைதிலேய சொன்னபடி.. உண்மையான சோழர்களுக்கும், பாண்டியர்களுக்கும் இந்த கதைக்கும் எந்த தொடர்பும் இல்லை.. இங்கே அவர்கள் வெறும் உவமைகள்..

நிகழ்காலவரலாறு - அதுவே சற்று குழப்பமானது தான் - அதை சற்று படத்தோடு பொருத்தி பாருங்கள் - சொல்லவந்த செய்தி என்னவென்று புரியும்..

ROBOT said...

@ மாயோன் !

//பட ஆரம்பைதிலேய சொன்னபடி.. உண்மையான சோழர்களுக்கும், பாண்டியர்களுக்கும் இந்த கதைக்கும் எந்த தொடர்பும் இல்லை.. இங்கே அவர்கள் வெறும் உவமைகள்..//

உண்மை தான் ...

Kazhudhai said...

@Maayon

The same things were reminded to me too in the climax scenes. Ennaal avatrai paarka iyalavillai.

Kazhudhai said...

@மாயோன் கொஞ்சம் கற்பனை தான். ஆனால் முழுக்க கற்பனை அல்ல. சோழ சாம்ராஜ்யம் அழிந்தது பாண்டியர்களால் தான். சோழர்கள் வம்சம் என்ன ஆனது என்பதற்கு சரியான சான்றுகள் இன்றளவும் மர்மமே. ஆனால் நீங்கள் கூறியது போல் எனக்கு கிளைமாக்ஸ் காட்சிகளை காணும் போது தோன்றியது. என்னால் அக்காட்சிகளை கண் கொண்டு காண இயலவில்லை.

@ரோபோட்

எனக்கும் கிளைமாக்ஸ் சொதப்பலாகவே தோன்றி இருக்கிறது. ஒரு சாதாரண ரசிகன் (நண்பர் மாயோன் போல் இவ்வளவு நுட்பமாக நோக்கவோ, சிந்திக்கவோ மாட்டான். கதயிலாது புலிக் கொடிக்காரர்களை வெற்றி அடைய வைத்திருக்கலாம்.

DHANS said...

// ஒரு சாதாரண ரசிகன் (நண்பர் மாயோன் போல் இவ்வளவு நுட்பமாக நோக்கவோ, சிந்திக்கவோ மாட்டான்//

nee thappa nenaikara thambi... aen ennai pondra satharana rasigan nutpamaga sinthikka maatanaa??


nalla padam anaal neelam sirithu athigam.....

Post a Comment

படித்தது பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் தங்கள் கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள இங்கே பதிவு செய்யவும்.என் எழுத்துக்களை நான் மெருகேற்றிக்கொள்ள உதவும்.மேலும் எழுத எனக்கு உற்சாகம் அளிக்கும்.