Saturday, July 4, 2020

The evolution of Sid Sriram - எனது பார்வையில்

Sid Sriram எனும் பாடகரின் வளர்ச்சி எனது பார்வையில் 

நீண்ட நாளைக்கு பிறகு எழுத ஆரம்பிக்கிறேன். உங்களின் ஆதரவு தேவை. ரொம்ப நாளா இதை பத்தி ஒரு பதிவு போடணும்னு நெனச்சிட்டே இருந்தேன். இன்று தான் முடிந்தது.

Sid Sriram - புது புது திறமைகளை அடையாளம் கண்டு அறிமுகப்படுத்தும் AR ரஹ்மானால் கண்டுகொள்ளப் பட்டு பிரபலமடைந்தவர். 

Sid Sriram - Prayer/Did Before | Sofar Chennai - YouTube


மணிரத்னத்தின் கடல் படத்தில் "அடியே அடியே" பாடல் மூலம் இளைஞர்களை மிகவும் கவர்ந்தார். இந்த பாடல் வந்த போது பிடித்து இருந்தாலும்  ஏதோ church choir ல high pitch ல பாடுறது போல தான் உணர்ந்தேன் பெரிய ஈர்ப்பு இல்லை இவரின் குரலில். பின் ஐ படத்தில் வந்த "என்னோடு நீ இருந்தால்" மிக பெரிய HIT.அந்த கால கட்டத்தில் திரும்ப திரும்ப கேட்ட பாடலில் Sid பாடிய இந்த பாடல் சேர்ந்தது. 


இப்படி கொஞ்சம் கொஞ்சமாக இளைஞர்கள் மத்தியில் sensation ஆக ஆரம்பித்த போதிலும் இவரின் குரல் ஒரே வகையான பாடல்களுக்கு தான் சரிப்பட்டு வரும் mostly high pitch என்று நினைத்தேன். இந்த நேரத்தில் பல இசை அமைப்பாளர்கள் இசையில் பல பாடல்கள் பாட ஆரம்பித்தார்.

AR ரஹ்மான் மட்டுமே பெரிய நல்ல வாய்ப்புகளை கொடுத்து கொண்டிருந்த போது அடுத்தாதாக அந்த லிஸ்டில் வந்து சேர்ந்தது நம் யுவன். யுவனின் speciality - king of love songs. ஒரே வகையான பாடல்களை பாடிக் கொண்டிருந்த Sid கொஞ்சம் வித்தியாசமான பாடல் பாட ஆரம்பம் இது தான் என்று நினைக்கிறன். அந்த வகையில் Sid-Yuvan காம்போவில் அருமையான ஹிட் பாடல் கிடைத்தது, பியார் பிரேமா காதல் படத்தில் "High on Love - ஏய் பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்கிறாய்". இந்த பாடல் ரொம்ப refreshing, பெரிய ஹிட் கூட. மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் சேர்ந்தது. இந்த கால கட்டத்தில் தான் ஒரு பெரிய ஈர்ப்பு ஏற்பட்டது இவர் குரலில்.


அப்படியே இந்த கூட்டணில சூர்யா செல்வராகவனின் NGK படத்தில் இன்னொரு நல்ல பாட்டு கிடைத்தது  "அன்பே பேரன்பே" Sid-Shreya ghosal இனிமையான குரலில். 


இது ஒரு பக்கம் போய்க்கொண்டு இருக்க, இன்னொரு பக்கம் வேறு மொழிகளிலும் பட்டய கிளப்பி கொண்டு இருந்தார். தெலுங்கில் "Inkem inkem inkem kaavale" viral sensational hit , அப்புறம் தமன் இசையில் என்னை மிகவும் கவர்ந்த "Saamajavara Gamanaa" வேற லெவல் singing நம்ம ஆளு. 


இப்படியாக தமிழ் சினிமா இசையில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்த ஆரம்பித்த Sid அடுத்து வந்து சேர்ந்த புகலிடம் - தவிர்க்கவே முடியாத இசைஞானி இளையராஜாவின் இசை சாம்ராஜ்யம். இங்கு தான் Sid குரலின் அடுத்த transformation. அது வரை அவர் பாடிய ஸ்டைலில் இருந்து அப்படியே வேறு தளத்தில் மிகவும் அமைதியான ரம்மியமான "உன்ன நெனச்சு நெனச்சு உருகிப் போனேன் மெழுகா" Psycho படத்தில்.



கூடவே ஒரு bonus - மேஸ்ட்ரோவின் வயலின் மேஜிக்கில் "நீங்க முடியுமா நினைவு தூங்குமா"



Sid Sriram குத்து பாட்டு பாடுவார்னு சொன்னா அவரே கூட நம்பி இருக்க மாட்டார். ஆனால் அதையும் நம் இசைஞானி நடத்தி காட்டினார் இந்த folk பாடல் மூலம். கேட்டவுடன் பயங்கர ஷாக் அட Sid குரலை இப்படி கூட உபயோகிக்கலாமான்னு. அது தானே நம் இசைஞானியின் மேஜிக்.



இசைஞானியின் கூட்டணியில் இன்னும் இவர் இருந்தால் வேறு பல variety கிடைக்கும் என்று தோன்றுகிறது.

Sid Sriram அவர்கள் இது போலவே இன்னும் நிறைய வித விதமான பாடல்கள் பாடி நம்மை மகிழ்விக்க வாழ்த்துக்கள்.

Note: இது என்னுடைய கருத்து மட்டுமே. நீங்கள் உங்களுக்கு பிடித்த Sid Sriram பாடலை பற்றி பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.  

sid sriram, music, தமிழ், தமிழ் இசை, இசை, பாடகர், தமிழ் சினிமா