Friday, April 9, 2010

மனதிற்கு இன்பம் தரும் இசை

பார்ப்பதற்கும், பின் அதை பற்றி எழுதுவதற்கும் நல்ல திரைப்படங்கள் எதுவும் வெளி  வராததால் (IPL புண்ணியத்தில்), (அங்காடி தெரு தவிர்த்து )என் மனதிற்கு பிடித்த ஆனால் மிகவும் பிரபலம் ஆகாத சில நல்ல பாடல்களை பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து இதோ ஆரம்பித்து விட்டேன் .

முதல் பாடல் : இள வேனிற்கால பஞ்சமி அவள் வானில் வந்த பௌர்ணமி 

பிரபு, மீனா நடித்த மனம் விரும்புதே உன்னை படத்தில் வரும் இந்த இனிய பாடல் என் "All time favourite" லிஸ்டில் ஒன்று . இசைஞானி இளையராஜாவின் அற்புதமான இசையில் பாடகர் ஹரிஹரன் மிகவும்  ரசித்து பாடியிருக்கும் ஒரு பாடல் இது . படம் ஒரு மகா மொக்க படம் என்பதால் கிடைக்க வேண்டிய உரிய அங்கீகாரம் இந்த பாட்டுக்கு கிடைக்காமல் போய்விட்டது என்றே  தோன்றுகிறது. ஒரு வேலை நல்ல படத்தில் வந்திருந்தால் இன்னும் அதிக பிரபலமாகியிருக்கும் இந்த பாடல். 


அம்மா இல்லாத ஒரு குழந்தையை வளர்க்கும் பிரபுவிடம் மீனா அதை பற்றி விசாரிக்கும் போது, அவர் தனது காதலியாக வாழ்வில் வந்து, பின் மனைவியாகவும், தாயாகவும் மாறி, பிறகு தன்னை விட்டு விட்டு இறந்து போன தனது மனைவியை பற்றி பாடுவதாக அமைந்த இந்த பாடலின் வரிகள் அனைத்தும் மிகவும் எழிமையாகவும் அதே சமயம் இசைக்கு ஏற்றார் போலவும் கவிதை நயத்துடனும் அமைந்தது இந்த பாடலின் இன்னொரு சிறப்பு.

"இள வேனிற்கால பஞ்சமி அவள் வானில் வந்த பௌர்ணமி சித்திர வானம் சித்திரம் தீட்டிடும் நேரம் ஒரு பத்தரை மாட்டு தங்க நிலாவை சந்தித்தேன்." என்று தொடங்கும் இந்த பாடலின் இசை மனதிற்கு இன்பம் தரும் வகையில் அமைந்திருக்கும். மேலும் இது போன்ற அற்புதமான வரிகளில் அமைந்திருக்கும்.

"தூக்கம் போனது அவளை நினைத்தே ஏக்கமானது பித்தனைப் போலானேன். பார்க்கும் இடமெல்லாம் அவளை போலே பாவை தெரிந்தது பைத்தியமாய் ஆனேன். என்னை போலே அவளும் இருந்தால் என்று அவள் சொல்ல கேட்டு அவள் சொல்லக் கேட்டு உள்ளம் எங்கோ போனது மீண்டும் மீண்டும் அவள் தான் வேண்டும் என்று என்னை  தூண்டும் உள்ளம் பச்சை கோடி காட்டுது. இது இன்று வந்த சொந்தமா இல்லை ஜென்ம ஜென்ம பந்தமா ? "

 தன்னை விட்டு பிரிந்து சென்றவள் விட்டு சென்ற சந்தோசமான நினைவுகளை நினைத்து நினைத்து ரசித்து பாடுவதாக அமைந்திருக்கும் இந்த பாடல் முடியும் வரிகள் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. திருமணம் ஆகி தனக்கு ஒரு துணையாக ஒரு குழந்தையை கொடுத்து விட்டு நினைவை விட்டு மட்டும் நீங்காமல் சென்றதை இப்படி எழுதியிருப்பார் கவிஞர்.

"மஞ்சள் குங்குமம் கொண்ட தேவதை எந்தன் நெஞ்சிலே மங்கள நாள் கொண்டால். திங்கள் ஆடிடும் வானம் போலவே எங்கள் வீட்டிலே மழலயைத்தான் தந்தாள். பாட வைத்து உள்ளம் ஆட வைத்து அன்பு பாட்டு சொல்லி வீட்டில் இன்பம் தந்தவள். தேட வைத்து நெஞ்சம் ஆட வைத்து என்னை சொகத்தீயில் வேக வைத்து போனவள். இந்த ஏழை என்னை மறந்தாள். எந்தன் ஜீவனுக்குள் கலந்தாள் "

இவ்வளவு பிடித்த ஒரு பாடலாக இருந்தாலும் இந்த பாடலை எழுதியவர் யார் என்று இன்னும் எனக்கு தெரியாது. தெரிந்தவர்கள் பகிர்ந்து விட்டு செல்லவும்.

குறிப்பு : இந்த பாடல் பார்ப்பதை விட கேட்பதற்கு தான் மிகவும் சிறந்த ஒன்று.

இதற்கு மேலும் இதை பற்றி பேசி உங்களை வெறுப்பேற்ற விரும்பவில்லை. கேட்டு பாருங்கள் நீங்களும் உணர்வீர்கள். இதோ பாடல் கேட்டு ரசிக்க :

http://musicmazaa.com/MMaPlayer/play/

பதிவிறக்கம் செய்ய :   http://w15.easy-share.com/8208221.html
 
பார்த்து ரசிக்க :

9 comments:

டம்பி மேவீ said...

NALLA RASICHU ELUTHI IRUKKINGA.... SATYAMA NAAN ITHAI YETHIRPARKKALA. SUPEREB. KEEP ROCKING.


NALLA PADIVU THALA

mani said...

இதே படத்தில் வந்த \\ ஏதோ ஏதோ நெஞ்சில் ஒரு மின்னல் // என்ற பாடலும் மிக அருமையானது ...

ROBOT said...

@டம்பி மேவீ

நன்றி.

@ மணி

தகவலுக்கு நன்றி.அந்த பாடலை நான் எப்படியோ மிஸ் பண்ணி விட்டேன் . இதோ கேட்டு விடுகிறேன்....

பருப்பு said...

அய்யா Cinema Addict ROBO அவர்களே,

உங்களையெல்லாம் என் மானஷீக குருவா நெனச்சு யாரு கிட்டயும் சொல்லாம கொள்ளாம ஒரு வலைப்பதிவ ஆரம்பிச்சிருக்கேன்..என் அழைப்பை ஏற்று மறுக்காம நீங்க வந்து நான் பிரபல பதிவராக ஐடியா கொடுக்கணும்

என் முகவரி http://cute-paruppu.blogspot.com/

அழைப்பிதழை புறக்கணிப்போர் மீது சட்டப்படி ஒன்னும் பண்ண முடியாது...அதனால வந்துரங்களேன்

என்றும் என்றென்றும் அன்புடன்
சிஷ்யன் பருப்பு
கத்தார்

பருப்பு THE GREAT பருப்ப்பு said...

அண்ணே இளையராஜா பத்தி நம்ம என்ன சொல்ல அதான் நாடே சொல்லுதே ....அவர் இசை சித்தர், அவ்ளோ தான் அதுக்கு மேல நான் ஒன்னும் சொல்ல விரும்பல..

அப்புறம் இந்தப்படம் எங்க ஊர்க்காரன் எடுத்தது...பாவம் இப்போ ஏதோ கூலி வேல செஞ்சு போலைக்கிறதா ரொம்ப வருஷம் முன்னாடியே கேள்விப்பட்டேன்

நான் முதல்லே சொல்லிட்டேன் கமெண்ட் மட்டும் தான் போடுவேன்...அப்ப வோட்டு? அது கருப்பு MGRக்கு மட்டும் தான் ஆமா....

அடிக்கடி கடைப்பக்கம் வாங்க...

krubha said...

இந்த பாடல் எனக்கும் மிகவும் பிடித்த பாடல். 1995-96 முதல் ராஜா அளித்த பல இசை படைப்புகள் கவனிக்க படாமலேயே போய்விட்டன. இதே போல “பொண்ணு வீட்டுகாரன்” படத்தில் வரும் ”நந்தவன குயிலே” பாடல். சின்ன துரை படத்தில் “கொலுசு கொஞ்சும் பாடல்” திருநெல்வேலி படத்தி “ஓல குடிசையிலே” போல ஒர் 50 பாடல்களாவது தேறும். ஹூம் என்ன செய்வது ஜனங்களின் ரசனை மாறிவிட்டது. இந்த பாடல்கள் எல்லாம் தேவாவின் கானா சத்தத்தில் எடுபடாமல் போனவை.

ROBOT said...

@ krubha

//ராஜா அளித்த பல இசை படைப்புகள் கவனிக்க படாமலேயே போய்விட்டன//

உண்மை தான். இது போன்ற பல அறிய இளையராஜாவின் பொக்கிஷங்களை கண்டு கொள்ளாமல் விடுவது நம் மக்களின் குற்றம் தான்.

/இந்த பாடல்கள் எல்லாம் தேவாவின் கானா சத்தத்தில் எடுபடாமல் போனவை. //

தேவாவின் கானாவை கூட கேட்டு விடலாம் ஆனால் இப்போது இசை என்ற பெயரில் சிலர் கொடுக்கும் கொடுமைகளை தாங்கவே முடியவில்லை.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

நான் ரசித்த மேலும் சில இசைஞானியின் பொக்கிஷங்களை விரைவில் நேரம் கிடைக்கும் போது பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைத்திருக்கிறேன். அனைவரும் அதையும் படித்து விட்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். நன்றி

Anonymous said...

தேவாவின் கானா என்றால் கேவலமா என்ன? பிரபலமாகாத அற்புதமான பாடல்களை அவரும் நிறைய அளித்துள்ளார். இயக்குனர்களின் விருப்பத்திற்கேற்ப பல பாடல்களை பிரதி செய்து பேரை கெடுத்துக் கொண்டதால் இளையராஜா போல ரசிகர்களின் ஆய்வு பல இல்லாமல் போய் விட்டது. கூர்ந்து கவனித்தால் அவர் அளித்த முத்துக்கள் தெரிய வரும். அவரது குரலிலேயே எத்தனையோ அருமையான கானா பாடல்களை அளித்துள்ளார். கானா பாடல் மலிவானது என்பது 'சினமா இசை மலிவானது' என்ற கர்நாடக இசை விரும்பிகளின் புறக்கணிப்பு போன்றதுதான்.

ROBOT said...

//தேவாவின் கானா என்றால் கேவலமா என்ன? பிரபலமாகாத அற்புதமான பாடல்களை அவரும் நிறைய அளித்துள்ளார். இயக்குனர்களின் விருப்பத்திற்கேற்ப பல பாடல்களை பிரதி செய்து பேரை கெடுத்துக் கொண்டதால் இளையராஜா போல ரசிகர்களின் ஆய்வு பல இல்லாமல் போய் விட்டது. கூர்ந்து கவனித்தால் அவர் அளித்த முத்துக்கள் தெரிய வரும்.//

உண்மை தான் . நான் தேவாவை குறை சொல்லவே இல்லையே ........இப்போது உள்ளவர்கள் இசை என்ற பெயரில் செய்யும் அட்டகாசத்தை தான் தாங்க முடியவில்லை என்று சொன்னேன். தேவாவின் சில பாடல்கள் எனக்கும் பிடிக்கும்.

வருகைக்கு நன்றி

Post a Comment

படித்தது பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் தங்கள் கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள இங்கே பதிவு செய்யவும்.என் எழுத்துக்களை நான் மெருகேற்றிக்கொள்ள உதவும்.மேலும் எழுத எனக்கு உற்சாகம் அளிக்கும்.