Friday, January 29, 2010

கோவா - விமர்சனம்

ஏற்கனவே யாரும் எதிர்பார்க்காமல் இரண்டு வெற்றி படங்களை கொடுத்த வெங்கட் பிரபுவின் மூன்றாவது படம், ரஜினியின் மகள் சௌந்தர்யாவின் ஆக்கர் ஸ்டுடியோஸின் முதல் தயாரிப்பு என்ற எதிர்பார்ப்புடன் வந்திருக்கும் ஒரு திரைப்படம் - கோவா.

படத்தின் கதையை நான் கண்டிப்பாக சொல்ல போவதில்லை. ஏன் யாரும் சொல்ல முடியாது. அப்படி ஒன்று இருந்தால் தானே சொல்ல முடியும்.

ஏற்கனவே நாம் பல பழைய படங்களில் பார்த்த செண்டிமெண்ட் காட்சிகளை எல்லாம் நக்கல் செய்யும் விதத்தில் வரும் கிராமத்து காட்சிகளில் படம் தொடங்கும் போது ஆஹா வெங்கட் பிரபு மறுபடியும் கலக்க போறாருன்னு நெனச்சேன். அந்த காட்சிகளில் ஆனந்தராஜ் மனுஷன் dialogue delivery மற்றும் நக்கலில் பின்னி எடுத்திருக்கிறார். மொத்தம் ஒரு பத்து நிமிஷமே வந்தாலும் ரசிக்கும் படியாக இருக்கிறது. விஜய் குமார்  , சண்முக சுந்தரம் என அனைவரும் நன்றாக செய்திருக்கின்றனர்.

அதன் பிறகு தான் படத்தின் உண்மையான சொரூபம் தெரிந்தது. படத்தில் ரசிக்கும் படியாக சில பல காட்சிகள் இருந்தாலும் கதை என்று பேருக்காவது எதையாவது யோசித்து இருக்கலாம் என்று தோன்றுகிறது. அது இல்லாததால் தான் என்னவோ பல இடங்களில் மொக்கையாக இருக்கிறது.

படத்தில் இருக்கும் சில ரசிக்க முடிந்த விஷயங்கள் :

1 . நாம் ஏற்கனவே பார்த்த நமது படங்களை நக்கல் செய்திருக்கும் spoof comedy

2 . வைபவ் எதாவது பெண்ணை செட் செய்து விட்டால் அவர் முகத்தில் லைட் அடித்து பீ ஜி எம்மில் வரும் சின்ன விடு படத்தின் "நாகிர்தனா " தீம் மியூசிக்.

3  . பிரேம் ஜிக்கு பீ ஜி எம்மில் வரும் 'கண்கள் இரண்டால் " பாடலும் அதில் தலையை ஆட்டி ஆட்டி அவர் ஜெய்யை imitate செய்வது .

4  பிரேம் ஜியின் காதலியாக வரும் அந்த foreign பொண்ணு அழகோ அழகு.

கிளைமாக்ஸ் surprise  நன்றாக இருந்தது .

படத்தில் இருக்கும் இன்னொரு நல்ல விஷயம் யுவன் ஷங்கர் ராஜா . பாடல்கள் அனைத்துமே ஏற்கனவே ஹிட். ஏழேழு தலைமுறைக்கும் பாடல் கங்கை அமரனின்  எதார்த்தமான வரிகளில் பண்ணைபுர வாரிசுகள் மிகவும் ரசித்து பாடியிருக்கின்றனர். அன்ட்ரியாவும் விஜய் டிவி சூப்பர் சிங்கரின் வெற்றியாளரான அஜீஷும்  பாடியிருக்கும் "இது வரை இல்லாத உணர்விது " பாடல் அருமையான மெலடி என்றால் இசைஞானி இளையராஜா , எஸ் பி பி அவர்கள் மற்றும் சித்ரா அவர்களின் பிரம்மண்டமான கூட்டணியில் வரும் "வாலிபா வா வா " பாடல் கேட்கும் போது மிகவும் பிடித்த பாடல். ஆனால் அந்த பாடலை இதை விட கேவலமான ஒரு சிட்டுவேசனில் படத்தில் யாராலும் சேர்க்க முடியாது. என்ன கொடுமை சார் இது .

படத்தில் சகிக்கவே முடியாத சில விஷயங்கள் :

சம்பத் character மற்றும் அரவிந்த் சம்பத் சம்பத்தப்பட்ட காட்சிகள் .
சினேஹா - வைபவ் flashback மற்றும் அந்த கப்பல் காட்சிகள் செம மொக்கை.

மொத்தத்தில் சௌந்தர்யா ரஜினிகாந்தின் புண்ணியத்தில் மொத்த டீமும் வெங்கட் பிரபுவின் holiday கோவாவில் கொண்டாடி இருக்கின்றனர் .கோவா எப்படி எல்லாம் இருக்கும் என்பதை மட்டும் நமக்கு காட்டி இருக்கின்றனர். கொஞ்சம் கதையையும் சிந்தித்து இருக்கலாம் என்று தொன்றுகிறது.

bottomline : கோவா படத்திற்கு சென்றதற்கு பதில் இன்னும் கொஞ்சம் செலவு செய்து கோவாவிற்கே போய் அதை பார்த்திருக்கலாம்.

என் கருத்துக்களை நீங்கள் அறிய இங்கே கொடுத்துள்ளேன். உங்கள் கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள இங்கே  பதிவு செய்யவும்.

7 comments:

DHANS said...

//நல்ல விஷயம் யுவன் ஷங்கர் ராஜா . பாடல்கள் அனைத்துமே ஏற்கனவே ஹிட்.//

ithelaam over thambi.... chennai 28, saroja alavuku intha pada paadalgal hit ellam illai, not attractive except two....

nan just missu...

ROBOT said...

@ DHANS

chennai 28 அளவுக்கு இல்லை என்றாலும் சரோஜா பாடல்களை விட பாடல்கள் கேட்பதற்கு நன்றாகவே இருக்கின்றன.பாடல்கள் சிலவற்றை படமாகிய விதம் தான் நன்றாக இல்லை .

DHANS said...

@rajan

it depends on the person, for me it doesnt attract much :)

damildumil said...

//ஏழேழு தலைமுறைக்கும் பாடல் வாலியின் எதார்த்தமான வரிகளில் பண்ணைபுர வாரிசுகள் மிகவும் ரசித்து பாடியிருக்கின்றனர்//

வாலியா? கங்கை அமரன்னு சொன்னாங்க

ROBOT said...

@damildumil

ஆம் நீங்கள் சொல்வது சரி தான் . "ஏழேழு தலைமுறைக்கும்" படலை எழுதியது கங்கை அமரன் தான் . திருத்தி விட்டேன் . "கோ என்பது முன் வார்த்தை தான் வா என்பது பின் வார்த்தை தான் கோ என்றது துன்பங்களை வா என்றது இன்பங்களை " என்று கோவா என்ற பெயருக்கே பெயர்காரணம் தந்தது தான் வாலி .

Anonymous said...

சம்பத் character மற்றும் அரவிந்த் சம்பத் சம்பத்தப்பட்ட காட்சிகள் கலாச்சாரம் என்ற பெயரில் நீங்கள் செய்யும் ஒளிவி மறைவு விசயங்களுக்கு வேண்டுமானால் தவறாகத்தெரியலாம். ஆறிவியல் பூர்வமாக, மருத்துவ பூர்வமாக அனுகினாலும் சில சுயநலவாதிகளுக்கு என்றும் உறைக்கப்போவதில்லை.

ROBOT said...

@Cool Guy
நான் அந்த காட்சிகளை கலாசார தவறு என்பதால் குறை சொல்ல வில்லை . இந்த படத்திற்கு தேவையே இல்லாமல் சேர்த்திருப்பதை தான் தவறு என்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Post a Comment

படித்தது பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் தங்கள் கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள இங்கே பதிவு செய்யவும்.என் எழுத்துக்களை நான் மெருகேற்றிக்கொள்ள உதவும்.மேலும் எழுத எனக்கு உற்சாகம் அளிக்கும்.