Friday, December 25, 2009

3 Idiots - திரை விமர்சனம்

நல்ல கருத்துக்களை அனைவரும் ரசிக்கும் வகையில் நகைச்சுவை கலந்து திரைப்படமாக கொடுப்பதற்கு பேர் போன இயக்குனரான ராஜ் குமார் ஹிரானியும் (munnabhai series புகழ்) புதிய நல்ல முயற்சிகளின் குருவான ஆமிர் கானும் இணைந்தால் என்ன கிடைக்கும் ?
நம்மை மகிழ்விக்க கூடிய ஒரு அற்புதமான திரைப்படம் தான் கிடைக்கும். அது தான் இந்த 3 Idiots.


படத்தில் சொல்ல வந்திருக்கும் கருத்து இது தான் .

"உன் profession உன் கையில் "

பெற்றோர்களின் கட்டாயத்தால் நாம் நமது கல்வியை, தொழிலை தேர்ந்தெடுக்காமல் நாம் விரும்பிய துறையில் படித்து அதில் வேலை செய்தால் வாழ்க்கை மிகவும் இனிக்கும் என்பதே இந்த படத்தின் 1 line story.

இந்த line நாம் ஏற்கனவே பல படங்களில் பார்த்ததாக இருந்தாலும் (சந்தோஷ்  சுப்ரமணியம் என்ன அதில் இன்னொன்றையும் profession+ marriage நம் இஷ்டப்படி செய்ய வேண்டும் என்று சொல்லி இருப்பார்கள்  , taare zameen par). அதை present செய்த விதம் மிகவும் புதுசு. நல்ல விஷயத்தை நல்ல முறையில் எத்தனை தடவை தந்தாலும் பார்க்கலாம் .

படம் முழுவதும் ஒரு வித freshness இருப்பது இயக்குனரின் திறமை.

கல்லூரி வாழ்கையில் சிலர் புத்தகமும் கையுமாக அலைவார்கள் . ஆனால் சிலர் புத்தகம் மட்டுமே வாழ்கை இல்லை "education is not only in books its in the way u learn things" என்ற கொள்கையுடன் திரிவார்கள் .இதில் முதல் வகை மாணவன் ஒருவனுக்கும் இரண்டாவது வகை மாணவனுக்கும் வாழ்வில் யார் வெற்றி பெறுகிறார் என்று நடக்கும் ஒரு சிறு போட்டி தான் மைய கதை . அந்த இரண்டாவது வகை மாணவனான ஆமிர் கான் கதா பத்திரம் மூலம் நமது கல்வி முறையில் உள்ள பெரிய தவறுகளை சுட்டி காட்டுகிறார் இயக்குனர் . அது என்னவோ மறுக்க முடியாத உண்மையாகவே படுகிறது . Instead of practically learning things, we are still focussed only towards clearing the exam and getting marks. அந்த இரண்டாவது வகை மாணவன் rancho வாகிய ஆமிர் கானும் அவன் கூட்டாளியான மாதவனும், ஷார்மன் ஜோஷியும்(3 Idiots) கல்லூரியில் செய்யும் அட்டகாசத்தை ரசிக்கும் படியாக படமாக்கி உள்ளனர் .

இந்த வயதில் ஆமிர் கான் college student ? என்று கேட்பவர்களுக்கு நம்மாளு ஏழு கழுத வயசுல +2  பல தடவை fail ஆகி அப்புறம் pass ஆகி காலேஜ் படிக்கிறாரே அந்த மாதிரியா என்று கேட்காதீர்கள். படத்தில் வரும் மூன்று பேரில் ஆமிர் கான் தான் மிகவும் மூத்தவர் என்று படம் பார்பவர்கள் உணரவே வாய்ப்பில்லை. அந்த அளவுக்கு முயற்சி எடுத்து தன் 8 pack கஜினி உடம்பை பல கிலோ குறைத்து உண்மையிலேயே காலேஜ் ஸ்டுடென்ட் போல இருப்பவரே அவர் தான் படத்தில் .

குறிப்பு : இவர் தன் உடம்பை குறைப்பதற்காக வெறும் பாலும் பிரட்டும் சாப்பிட்டு வாழ்ந்தாராம் . தன் பிறந்த நாள் கேக்கை கூட சாப்பிடவில்லையாம் .இது தான் ஆமிர் கானின் professionalism.

மாதவனும், ஷார்மன் ஜோஷியும், காலேஜ் principal ஆக வரும் போமன் இராணியும் , ஆமிருடன் போட்டி போடும் அந்த மாணவனும் தங்கள் வேலையை முழுமையாக செய்திருக்கின்றனர் . மிக சிறிய நேரமே வந்தாலும் மனதை கொள்ளை கொள்ளும் இன்னொரு கதாபாத்திரம் காலேஜ் ஹாஸ்டலில் வேலை செய்யும் சிறுவனான மில்லி மீட்டர் .

படத்தின் பிளஸ் :

படத்தின் தூணாக இருக்கும் ஆமிர் கான் மற்றும் படத்துடன் இணைந்து பயணிக்கும் healthy comedy.


1. சொல்ல வந்தது சீரியசான மேட்டர் என்றாலும் ஒரு நிமிடம் கூட சலிப்பு தட்டாமல் படம் முழுவதும் ரசித்து சிரித்து மகிழும் படியாக தந்திருக்கிறார்கள்.

2.ஒரு வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களை கொடுத்தாலும் அதை தரமானதாக கொடுப்பதற்காகவே ஆமிர் கானை பாராட்டலாம்.

Highlights :

ராஜ் குமார் ஹிரானியின் ஒவ்வொரு படங்களிலும் ஒவ்வொரு positive மேட்டர் இருக்கும்

munnabhai mbbs - கட்டி புடி வைத்தியம்

munnabhai2-  GET WELL SOON (அஹிம்சா வழி)

3 Idiots - ALL IZZ WELL (படம் பார்த்தவர்களுக்கு புரியும்) இதுவும் ஹிட்டு தான் .

கல்லூரி விழாவின் போது ஹிந்தி அரை குறையாக தெரிந்த அந்த opposite மாணவன் , அனைவரையும்  கவர்வதற்காக தான் இன்னொருவரிடம் கேட்டு ஹிந்தியில் எழுதி வைத்த ஸ்க்ரிப்டில் சில வார்த்தைகளை ஆமிர் கான்  மாற்றி எழுதி வைக்க அது புரியாமல் அந்த மாணவன் அதை மேடையில் படிக்கும் காமெடி காட்சிக்கு முழு அரங்கமே விழுந்து விழுந்து சிரிக்கிறது.

படத்தில் வரும் அந்த பிரசவ காட்சி நல்ல காட்சியமைப்பு .

கிளைமாக்ஸ் காட்சியில் வரும் திருப்பம் யூகிக்க முடிந்தாலும் நன்றாகவே இருக்கிறது .

இன்னும் பல .....

படத்தின் பாடல்கள் எங்கேயோ கேட்ட மெட்டுக்கள் ஆனாலும் படத்துடன் பார்க்கையில் ரசிக்க முடிகிறது . படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இன்னொரு நபர் கேமரா மேன் . சிம்லாவாகட்டும் மணாலியாகட்டும் காலேஜ் ஆகட்டும் அனைத்தையும்  கண்ணுக்கு  குளிர்ச்சியாக படமாக்கி இருக்கிறார்.

குறை :

1.பல லாஜிக் மீறல்கள் .

2. படம் முழுக்க நகைச்சுவையாக போவதாலோ என்னவோ all is well பாடலுக்கு பிறகு வரும் tragedy காட்சி படத்துடன் ஒட்டவில்லை .

3  கரீனா கபூரின் காதல் காட்சிகளும் படத்துடன் தனித்தே வருகின்றன. 
---------------------------------------------------------------
 ராஜ் குமார் ஹிரானியால் நல்ல கதையை வைத்து கொண்டு காமெடி கலந்து மேலும் பல அருமையான feel good படங்களை  கொடுக்க முடியும் என்றே தோன்றுகிறது . அவருக்கு ஒரு பெரிய salute . munnabahi mbbs  படத்தை பல மொழிகளில் பல தடவை பார்த்தும் படம் இன்னும் சலிக்க வில்லை என்பதே இதற்கு ஒரு உதாரணம் .


மொத்தத்தில் உங்கள் கவலைகளை எல்லாம் மறந்து சந்தோசமாக ஒரு இரண்டரை மணி நேரத்தை கழிக்க வேண்டுமானால் இந்த படத்திற்கு தாராளமாக செல்லலாம்.


Bottomline:
Come with a grin , go with a big smile on your face
இன்னும் இந்த படம் பற்றி மறந்தவைகளை முடிந்தால் மறுபடியும் எழுதுகிறேன். நண்பர்கள் மீண்டும் அழைப்பதால் இப்போது மீண்டும் தயாராகிறேன் 3 Idiots பார்க்க .
Saturday, December 12, 2009

சூப்பர் ஸ்டாருக்கு ஒரு இதயம் கனிந்த வாழ்த்து


"அடுத்தவன  கெடுத்ததில்லை வயுத்துல தான் அடிச்சதில்ல உழைப்ப நம்பி பொழைப்பு நடத்துறேன் நான் உண்மையாக ஊருக்குள்ள  "
என்ற வரிகளுக்கு எடுத்துக்காட்டாய் வாழும் தலைவனே !
உன் கடின உழைப்பினால்  புகழின் உச்சியை அடைந்த போதும் தன்னடக்கத்தின் முழு உருவமாய் வாழ்ந்து கொண்டு இருப்பவனே !  உன் நிலையில் மற்றவர்கள் இருந்தால் அவர்கள் செய்யும் அட்டகாசத்தை நினைத்து கூட பார்க்க முடியாது .
உன்னிடம் தான் கற்றுகொள்ள இன்னும் எத்தனை எத்தனை உள்ளது . உன்னிடம் உள்ள அனைத்து நல்ல குணங்களையும் கற்றுகொள்ள  இந்த ஒரு ஜென்மம் போதாது எங்களுக்கு. நீ உயர்ந்தது மட்டும் இன்றி உன்னை நம்பி இருக்கும் அனைவருக்கும் முடிந்த வரை உதவி அவர்களையும் முன்னுக்கு கொண்டு வரும் உன் குணம் யாருக்கு வரும் . நீ எப்போதும் பசியோடு இருப்பவர்களுக்கு உணவை கொடுப்பவர் இல்லை மாறாக  அவர்களுக்கு மீன் பிடிக்க கற்று கொடுப்பவர் . அதனால் அவர்கள் தங்கள் உழைப்பினால்  வாழ கற்றுக்கொள்கின்றனர் . உதவி செய்வது பெரிதில்லை ஆனால் அந்த உதவி  உரியவர்களுக்கு உரிய விதத்தில் இருக்க வேண்டும் என்று எங்கள் அனைவருக்கும் கற்று கொடுத்து இருக்கிறாய் . உன்னால் இப்போது உன் அன்பு தம்பிகளாகிய ரசிகர்களும் தங்களால் முடிந்த வரை மற்றவர்களுக்கு உதவி செய்வதில் வல்லவர்களாகி விட்டனர் என்பது இப்போது அவர்கள் செய்து வரும் நல்ல செயல்களினால் புலனாகிறது.

உன்னால்  கெட்டவர்கள் யாரும் இல்லை இந்த உலகில் ஆனால் வாழ்ந்தவர்கள் கோடான கோடி .

உன்னை இகழ்பவரையும் "இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் " என்னும் குறளுக்கேற்ப  உன் அன்பினால் மற்றுபவனே !

கெட்டவர்களுக்கு பொல்லாதவனாகவும ,  நல்லவனுக்கு நல்லவனாகவும் , தர்மத்தின் தலைவனாகவும் ,  எங்களுக்கு கிடைத்த அரிய  முத்தே !  எங்கள் அனைவருக்கும் ஆன்மிகத்தின் சக்தியை உணர வாய்த்த அருணாச்சலமே , படையப்பாவே ,  ராகவேந்திரரே  !

நீ நீண்ட நாள் நலமுடனும் சந்தோசத்துடனும்,  நிம்மதியுடனும் (சந்தோசத்திற்கும் நிம்மதிக்கும் தான் வித்தியாசத்தை எங்களுக்கு கற்று கொடுத்து விட்டாயே )  வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம் .

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

இப்படிக்கு தானாக சேர்ந்த  உன் கோடானு கோடி அன்பு சாம்ராஜ்யத்தில்  ஒருவன் .

Sunday, December 6, 2009

paa - விமர்சனம்

paa - விமர்சனம்  

காதல் , வெட்டு குத்து , அடி தடி போன்றவை உள்ள படங்களை பார்த்து சலித்து போனவர்களுக்கு வரப்பிரசாதம் இந்த திரைப்படம் .

யதார்த்தமான வித்தியாசமான கதையுடன் எல்லா விதத்திலும் நேர்த்தியுடன் இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். progeria என்ற நோயால் பதிக்கப்பட்ட ஒரு சிறுவனை சுற்றி அமைந்திருக்கும் திரைக்கதை. progeria என்னும் நோயால் பாதிக்கபட்டவர்கள் ஒரு வயது ஆவதற்குள் ஐந்து மடங்கு வயதானவர்களை போல ஆகி விடுவர்.


progeria என்ற நோயுள்ள குழந்தை ஆரோ . இவர் தனது பாட்டி மற்றும் தாயுடன் வசிக்கிறார் .  இவரின் தந்தையான அபிஷேக் பச்சன் அரசியல்வாதி. அரசியல் வாதி என்றால் நம் வழக்கமான ரவுடிகளுடன் திரியும் அரசியல் வாதி அல்ல. அரசியல் என்பது கூட ஒரு நல்ல தொழில் தான் அதில் கூட நாம் செய்ய வேண்டிய கடமை நிறைய இருக்கிறது என்று கருதும் ஒருவர். ஆரோ வின் தாய் வித்யா பாலன் ஒரு "gynaecologist" பிரசவ டாக்டர் . இருவருக்கும் திருமணம் ஆகும் முன்பே பிறந்த குழந்தையான ஆரோவினால் தன் லட்சியம் பாதிக்கப்படும் என இருவரும் பிரிகின்றனர்.

ஆரோ படிக்கும் ஒரு பள்ளியில் ஒரு விழாவிற்கு தலைமை தாங்கி பரிசு வழங்கும் சமயம் ஆரோவை சந்திக்கிறார் ஆரோவின் தந்தையான M.P. அபிஷேக் அந்த உண்மை தெரியாமல் . இதிலிருந்து தொடரும் அவர்கள் நட்பு எப்படி பிரிந்த ஆரோவின் குடும்பத்தை இணைக்கிறது என்பது தான் மீதி கதை.

இதில் என்ன புதிதாக இருக்கிறது என்று நினைக்கலாம். ஆனால் இந்த கதையை ஒரு கவிதை போல படமாக்கி உள்ளனர். நோயினால் பதிக்கப்பட்ட ஆரோவை பற்றிய கதை என்பதால் சோகமாக இருக்கும் என்று நினைத்தால் படத்தை மிகவும் குதூகலமாக்குவதே அந்த சிறுவன் ஆரோ தான். அவன் வரும் ஒவ்வொரு காட்சியும் அவன் பேசும் ஒவ்வொரு வசனமும் ரசிக்கும் படியாக தந்திருப்பது இயக்குனரின் சாமர்த்தியம். இத்தகு நோயால் பாதிக்கப்பட்ட சிறவனை பார்த்து அவன் தாய் வித்யா பாலனிடம் இன்னொரு குழந்தையின் தாய் உன் குழந்தைக்கு என்ன பிரச்சனை என்று கேட்கும் போது பல லட்சம் பேர்களில் ஒருவருக்கு மட்டுமே இருக்கும் இந்த "chromosome" பிரச்சனை என் குழந்தைக்கு இருக்கிறது . அவன் மிகவும் அதிஷ்டசாலி தானே என்று கேட்கும்  காட்சி "height of positiveness". ஒரு நல்ல அரசியல்வாதியாக இருப்பதால் என்ன மாதிரி பிரச்சனைகள் வரும் அதை அபிஷேக் எப்படி சமாளிக்கிறார் என்பதையும் அழகாக காட்டியிருக்கிறார்கள்.

படத்தின் ஒவ்வொரு காட்சியின் மெருகையும் குலைக்காமல் மேலும் பலம் சேர்ப்பது பி சி ஸ்ரீராமின் ஒளிப்பதிவு மற்றும் இளையராஜாவின் இசை. பாடல்கள் அனைத்தும் நாம் நெடுங்காலமாக கேட்டு ரசித்து கொண்டிருக்கும் இசைஞானியின் பழைய தமிழ் பட பாடல்கள் என்றாலும் அதை சரியான இடத்தில் படத்தில் சேர்த்திருப்பது இயக்குனரின் திறமை. குறிப்பாக பா தீம் மனதை விட்டு நீங்க மறுக்கிறது. (இது நாம் ஏற்கனவே கண்டு கொள்ளாமல் விட்ட அது ஒரு கனா காலம் தமிழ் படத்தின் title சாங்).

இதற்கெல்லாம் மேலே படத்தை தூக்கி நிறுத்தம் ஒரு கதாபாத்திரம் ஆரோ .படம் பார்ப்பவர்களுக்கு ஒரு நிமிடம் கூட அமிதாப் பச்சன் தெரியாமல் இருப்பது அவரின் மிக பெரிய வெற்றி . படம் முழுவதும் நமக்கு ஆரோவாகவே தெரிகிறார். மேக்கப் மட்டுமில்லாது நடை உடை பேச்சு என்று அனைத்திலும் ஒரு பன்னிரண்டு வயது சிறுவனை (progeria வினால் அறுபது வயதுடைவனை போன்ற ஒரு பன்னிரண்டு வயது சிறுவன்) தன் நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார் இந்த மேதை. absolutely brilliant performance from amitabhji. இவரின் இந்த நடிப்பிற்கு எந்த award வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

மொத்தத்தில் நல்ல படங்களை விரும்புபவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு படம் இந்த பா .

Saturday, November 28, 2009

யோகி - விமர்சனம்

யோகி - விமர்சனம் 

நீங்கள் மென்மையான மனதுடையவராக இருந்தால் தயவு செய்து இந்த படத்தை தவிர்ப்பது நல்லது .படம் முழுக்க கொடூரம் தலை விரித்தாடுகிறது.

பிஞ்சு குழந்தையை கையில் வைத்து இருக்கும் சிறுவனை அவன் தந்தை எட்டி உதைப்பதால் அந்த குழந்தை இறந்து போவது . அந்த கணவனின் தொல்லை தாங்க முடியாமல் அந்த சிறுவனின் தாய்  தற்கொலை செய்து கொள்வது இது போன்ற கொடுமைகளை அனுபவித்து அதனால் பணத்திற்காக எதுவும் செய்யும் அந்த சிறுவன் தான் படத்தின் நாயகன் அமீர் . கழுத்தை அறுத்து கொலை செய்வது போன்ற காட்சிகள் என்று  வன்முறையின் உச்ச கட்டமாக இருக்கிறது  இந்த படம் .

இவ்வாறு அவன் திருடும் ஒரு காரில் அவனுக்கு கிடைக்கும் குழந்தைக்கும் அவனுக்கும் ஏற்படும் உறவு தான் மீதி கதை . அந்த குழந்தையை கொல்ல அதன் தந்தை (initial பிரச்சனை வந்துர கூடாதுன்னு அப்பா ஆனவர் ) முயற்சி செய்ய அதனை அமீர் எப்படி காப்பதுகிறார் என்று படமாக்கி உள்ளனர் . மிக சில காட்சிகள் மனதை தொடும் படியாக இருந்தாலும் மொத்தத்தில் பெரிய சொதப்பல் .

படத்தில் சொல்லி கொள்ளும் படியாக இருக்கும் ஒரே விஷயம் பின்னணி இசை . பாடல்கள் பெரிய அளவில் ஒன்றும் இல்லை என்றாலும் பின்னணி இசையில் பின்னி எடுத்திருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா . முக்கியமாக அமீர் அந்த காரில் இருந்து குழந்தையை எடுத்து செல்லும் கட்சி மற்றும் சண்டை காட்சிகளில். இன்னொன்று cinematography. அற்புதமாக படமாக்கி இருக்கிறார்கள் .

யோகி இன்னொரு மொழி படத்தின் scene-by-scene copy வேறாம் . அதை கூட சரியாக செய்ய வில்லை என்றே சொல்ல வேண்டும் .இது போன்ற கதைகள் நிறைய பார்த்து சலித்து போனதால் இந்த படத்தை பற்றி சொல்ல வேறேதும் இல்லை.

தமிழில் நல்ல இயக்குனர்கள் நல்ல தரமான படத்தை கொடுத்தவர்கள் hero ஆகும் முயற்சியில் தாங்கள் பெற்ற நல்ல பெயரை கெடுத்து கொள்கிறார்கள் என்பதற்கு சேரன் , எஸ் ஜே சூர்யா வரிசையில் அமீர் சேர்ந்து விடுவார் என்று தோன்றுகிறது .இதில் குறிப்பாக எஸ் ஜே சூர்யாவை  இயக்குனராக பார்க்கவே ஆசைபடுகிறேன் . அவரை போன்று படத்தின் கதையை முன் கூட்டியே சொல்லியும் படத்தை ஹிட் ஆகும் தைரியம் உடையவர்கள் மிகவும் அபூர்வம் . படத்தின் திரை கதையில் தொய்வில்லாமல் ரசிக்கும் படியாக தருவது இவரின் மிக பெரிய பலம் .ஆனால் அவர் அநியாயமாக hero ஆகி வியாபாரி , திருமகன் என்று கொலையாய்  கொள்கிறார் இப்போது . அதே நிலைக்கு அமீரும் வந்து விடக்கூடாது என்பதே நம் ஆசை .

 

Sunday, November 22, 2009

Expected movies in December

Waiting for two good movies to finish this year in a good note.

1. Paa - with the combined excellence of Maestro Ilayaraja, P C Sreeram, Balki and ofcourse the evergreen Amitabh ji .


2. 3 Idiots - The ever reliable Aamir khan joining hands with Raj Kumar Hirani (Director of Munnabhai series) which is based on the famous Book by Chetan Bhagat.

பழசி ராஜா - திரை விமர்சனம்

தரமான திரைப்படங்களுக்கு ஒரு காலத்தில் பெயர் போன, ஆனால் இப்போது அரிதாகி போன  மலையாளத் திரை படைத்துறை தந்திருக்கும் ஒரு தரமான படைப்பு இந்த பழசி ராஜா . தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டு இருக்கிறார்கள்.


பழசி கேரள வர்மா ஆங்கிலேயர்களை எதிர்ப்பு போராட்டத்தை முதலிலேயே துவக்கியைதையும் அவர் போராடிய விதத்தையும் மிக நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார்கள். பழசி ராஜாவை பற்றி நம் மக்களுக்கு அதிகம் தெரியாததால் தெரிந்து கொள்ள இந்த திரைப்படம் உதவுகிறது.

மம்முட்டி பழசி ராஜாவாகவே வாழ்ந்திருக்கிறார். தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் மனதில் நிற்கிறார் .அவரது படை தளபதி கதாபாத்திரத்தில் சரத்குமார் தனது பணியை செவ்வனே செய்திருக்கிறார் .இவரின் உடல் இந்த வேடத்திற்கு பெரிய பலம் . படத்தில் குறிப்பிட வேண்டிய இன்னும் இரண்டு பேர் மனோஜ் கே ஜெயன் மற்றும் அவர் துணைவியாக வரும் பத்மப்ரியா . இவர்கள் இருவரும் மலை வாழ் மக்களுக்கு தலைமை தாங்கி போர் புரிபவர்கள் . பத்மப்ரியா இப்படி கூட நடிப்பார் என்று இந்த படம் பார்த்த பின் தான் தெரிந்து கொண்டேன் . படத்தின் இன்னொரு கதாநாயகி கன்னிகா. படம் முழுவதும் அழுது கொண்டே இருக்கிறார் . மற்றபடி சொல்வதற்கு ஏதும்  இல்லை .

படத்தை மலையாளத்தில் பார்த்தால் கூட கதையை நமக்கு புரிய வைத்து விடும் நமது இசை ஞானியின் பின்னணி இசை . பெரிய இசை ராஜாங்கமே நடத்தி இருக்கிறார் இந்த இசை மேதை . பின்னணி இசை என்றால் அது இளைய ராஜா தான் என்று ஆணித்தனமாக நிரூபித்திருக்கிறார். காடுகளில் நடக்கும் போர் காட்சி , ஆங்கிலேயர் இடத்தில நடக்கும் காட்சி , மலை வாழ் மக்கள் ஒளிந்திருந்து பறவை போல் ஒழி எழுப்பி தாக்குவதாகட்டும் அனைத்திலும் இயற்கையான தத்ருபமான இசையினால் மிரட்டியிருக்கிறார் நம் மேஸ்ட்ரோ. உதாரணமாக ஆங்கிலேய கவர்னர் டங்கன் உடன் பழசி ராஜாவாகிய மம்முட்டி சமாதானம் பேச வரும் காட்சியில் இரண்டு ஆங்கிலேயர்களில் ஒருவர்  பழசி ராஜா தனியாக வந்திருக்கிறார் அவரை கைது செய்து விடலாம் என்பார் . அப்போது இன்னொருவர் கோட்டைக்கு வெளியே நிற்கும் பழசி ராஜாவின் படையை அவருக்கு கட்டும் காட்சியில் தனது இசையின் மூலம் அந்த ஆங்கிலேயர்க்கு ஏற்படும் பயத்தை உணர்த்தியிருப்பார். அந்த காட்சி சொல்லி புரிய வைக்க முடியாது இசையுடன் பார்த்தால் தான் புரியும் இளையராஜா அவர்களின் மகிமை.

 படத்தில் மிக பெரிய பலம் cinematography மற்றும் பின்னணி இசை. போர்க்காட்சிகளை தனது கேமரா மூலம் நம் கண் முன் நிறுத்துகிறார் கேமரா மேன் . படம் முழுவதும்  வித விதமான இசைக்கருவிகளை பயன்படுத்தி இருக்கிறார் இளையராஜா . படத்தில் இரண்டு பாடல்கள் . குன்றத்து கொன்றைக்கும் பாடல் சித்ரா அவர்களின் குரலில் தாலாட்டுகிறது என்றால் மது பாலகிருஷ்ணன் குரலில் வரும் ஆதி முதல் காலம் பூத்ததிங்கே  பாடல் நம்மை மிரள வைக்கிறது . இந்த படலை படமாக்கி இருக்கும் விதமும் படத்தில் இந்த பாடலை சேர்த்திருக்கும் இடமும் கன கச்சிதம்  (Perfect match).

இந்த கால கட்டத்தில் இப்படி ஒரு வரலாற்று கதையை படமாக எடுப்பதே ஒரு சவாலான விஷயம் . அதை நேர்த்தியாக எடுப்பதென்பது இன்னும் சவாலான ஒன்று . அதை முடிந்த வரை நன்றாக செய்திருப்பதற்காகவே இந்த படத்தையும் , இதன் இயக்குனரையும் பாராட்டலாம் .

இந்த வகை திரைப்படங்கள் நிறைய பார்த்து விட்டாலும் (mangal pandey , jodha akbar) இவர்களின் நல்ல முயற்சிக்காக இதையும் பார்க்கலாம்.

பழசி ராஜா - perfectness.

To feel the magic of Maestro, click the Pazhassi Raja trailor link below:

picrure courtesy : www.behindwoods.com
Trailor : www.youtube.com

Friday, October 2, 2009

திரு திரு துரு துரு திரைப்படம் - ஒரு கண்ணோட்டம் எனது பார்வையில்


வணக்கம் . இது எனது முதல் பதிவு .சென்னையின் best multiplex theatre satyam முதன் முதலாக  தயாரித்து இருக்கும் திரைப்படம் திரு திரு துரு துரு.

முதலில் இது எந்த மாதிரியான audience பார்க்க வேண்டிய படம் .

மசாலா commercial படம் , thriller , action படங்களை விரும்புபவராக இருந்தால் தயவு செய்து இந்த படத்தை தவிர்ப்பது நல்லது .

இது ஒரு மென்மையான light hearted feel good shuttle comedy movie. பொய் சொல்ல போறோம்  வகை படம் உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த படம் கண்டிப்பாக பிடிக்கும் .


சரி படத்தின் கதைக்  களம் என்ன ?

மௌலியின் கம்பனியில் வேலை பார்க்கும் அவரது வளர்ப்பு மகனான நமது ஹீரோவின் அஜாக்ரதையினால் ஒரு பெரிய ப்ராஜெக்ட் கை நழுவி போக போகும் வேலையில் , அந்த  கம்பனியை தூக்கி நிறுத்த ஹீரோவும் , அதே கம்பனியில் வேலை பார்க்கும் ஹீரோயினும் போராடி வெற்றி பெரும் பழைய கதை தான் . இருந்தாலும் screenplay மிகவும் சாமர்த்தியமாக செய்திருப்பதால் ரொம்ப fresh ஆக இருக்கிறது . காமெடியை படத்தில் வேண்டுமென்றே திணிக்காமல் அன்றாட நிகழ்வுகளின் காமெடியை பதிவு செய்திருக்கிறார் முதல் பட டைரக்டர் J S நந்தினி  (இவர் கண்ட நாள் முதல் என்ற ஒரு அருமையான படத்தை தந்த பிரியாவின் assistant என்பது குறிப்பிடத்தக்கது ).

ஒரு குழந்தைக்கான விளம்பர படம் தயாரிக்க ஒரு நல்ல குழந்தையை தேடி போக அதனால் ஏற்படும் பிரச்சனை அதிலிருந்து எப்படி கதாநாயகனும் கதாநாயகியும் தப்பித்து வெற்றி பெறுகிறார்கள் என்பதை முழுக்க முழுக்க காமெடியாக செய்திருக்கிறார்கள் . அவர்களிடம் மாட்டும் அந்த குழந்தை கொள்ளை அழகு . பல இடங்களில் லாஜிக் மீறல்கள் இருந்தலும் படத்தின் freshness அதையும் மறந்து ரசிக்க வைக்கிறது .
வழக்கமான அடி தடி படங்களாக வந்து நம்மை சாகடிக்கும் வேளையில் இந்த மாதிரி  ஒரு படம் உண்மையில் வரவேற்கத்தக்கது. ஹீரோ அஜ்மல் - காமெடி இரண்டிற்கும் சம்பந்தமே இல்லை என்று நினைத்து தான் படத்திற்கு சென்றேன் . ஆனால் கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்திருக்கிறார் . கதாநாயகி ரூபா சில இடங்களில் over acting  என்றாலும் அனைவரும் தங்கள் கேரக்டரை நன்றாகவே செய்துள்ளனர் .

இந்த படத்தின் மிக பெரிய பிளஸ் இதன் டைரக்டர் என்றே சொல்ல வேண்டும் ரொம்ப வாய் விட்டு சிரிக்க வைக்கும் காமெடி இல்லை என்றாலும் ரசிக்கும்படியான நல்ல ஒரு  காமெடி படத்தை எந்த ஒரு vulgarity இல்லாமல் தந்ததற்காக . இன்னொன்று மௌலி . மௌலி ஒரு அற்புதமான நடிகர் என்பதை இன்னொரு முறை நிரூபித்துள்ளார் . அவரது டைலாக் டெலிவரி காமெடி டைமிங் பிரமாதம் . பிஸ்தா , பொய் சொல்ல போறோம் ஆகிய படங்களில் கூட மௌலியை நன்றாக பயன் படுத்தி இருப்பார்கள் . அந்த வரிசையில் இந்த படத்தையும் சேர்த்துக் கொள்ளலாம் . படத்தின் இசை மணி ஷர்மா . பாடல்கள் அனைத்தும் சுமார் ராகம் . சில்லென வீசும் பூங்காற்று எனும் மெலடி ரசிக்க முடிகிறது . திரு திரு துரு துரு தீம் music படத்தோடு பார்க்க நன்றாக உள்ளது .

மொத்தத்தில் இது குடும்பத்தோடு எந்த ஒரு நெருடலும் இல்லாமல் பார்க்க கூடிய ஒரு நல்ல படம் . சென்னை போன்ற இடங்களில் high class audience புண்ணியத்தில் நன்றாக ஓடும் . மற்ற ஊர்களில் B & C சென்டர்களில் response  பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் .

Thanks,

Cinema Addict (only good movies)

Thursday, October 1, 2009

Intro:

I am a cinema addict that too good movies inspite of the language. In this blog, I will share my thoughts about all the movies that I see. I will try my level best to write more.