Friday, December 25, 2009

3 Idiots - திரை விமர்சனம்

நல்ல கருத்துக்களை அனைவரும் ரசிக்கும் வகையில் நகைச்சுவை கலந்து திரைப்படமாக கொடுப்பதற்கு பேர் போன இயக்குனரான ராஜ் குமார் ஹிரானியும் (munnabhai series புகழ்) புதிய நல்ல முயற்சிகளின் குருவான ஆமிர் கானும் இணைந்தால் என்ன கிடைக்கும் ?
நம்மை மகிழ்விக்க கூடிய ஒரு அற்புதமான திரைப்படம் தான் கிடைக்கும். அது தான் இந்த 3 Idiots.


படத்தில் சொல்ல வந்திருக்கும் கருத்து இது தான் .

"உன் profession உன் கையில் "

பெற்றோர்களின் கட்டாயத்தால் நாம் நமது கல்வியை, தொழிலை தேர்ந்தெடுக்காமல் நாம் விரும்பிய துறையில் படித்து அதில் வேலை செய்தால் வாழ்க்கை மிகவும் இனிக்கும் என்பதே இந்த படத்தின் 1 line story.

இந்த line நாம் ஏற்கனவே பல படங்களில் பார்த்ததாக இருந்தாலும் (சந்தோஷ்  சுப்ரமணியம் என்ன அதில் இன்னொன்றையும் profession+ marriage நம் இஷ்டப்படி செய்ய வேண்டும் என்று சொல்லி இருப்பார்கள்  , taare zameen par). அதை present செய்த விதம் மிகவும் புதுசு. நல்ல விஷயத்தை நல்ல முறையில் எத்தனை தடவை தந்தாலும் பார்க்கலாம் .

படம் முழுவதும் ஒரு வித freshness இருப்பது இயக்குனரின் திறமை.

கல்லூரி வாழ்கையில் சிலர் புத்தகமும் கையுமாக அலைவார்கள் . ஆனால் சிலர் புத்தகம் மட்டுமே வாழ்கை இல்லை "education is not only in books its in the way u learn things" என்ற கொள்கையுடன் திரிவார்கள் .இதில் முதல் வகை மாணவன் ஒருவனுக்கும் இரண்டாவது வகை மாணவனுக்கும் வாழ்வில் யார் வெற்றி பெறுகிறார் என்று நடக்கும் ஒரு சிறு போட்டி தான் மைய கதை . அந்த இரண்டாவது வகை மாணவனான ஆமிர் கான் கதா பத்திரம் மூலம் நமது கல்வி முறையில் உள்ள பெரிய தவறுகளை சுட்டி காட்டுகிறார் இயக்குனர் . அது என்னவோ மறுக்க முடியாத உண்மையாகவே படுகிறது . Instead of practically learning things, we are still focussed only towards clearing the exam and getting marks. அந்த இரண்டாவது வகை மாணவன் rancho வாகிய ஆமிர் கானும் அவன் கூட்டாளியான மாதவனும், ஷார்மன் ஜோஷியும்(3 Idiots) கல்லூரியில் செய்யும் அட்டகாசத்தை ரசிக்கும் படியாக படமாக்கி உள்ளனர் .

இந்த வயதில் ஆமிர் கான் college student ? என்று கேட்பவர்களுக்கு நம்மாளு ஏழு கழுத வயசுல +2  பல தடவை fail ஆகி அப்புறம் pass ஆகி காலேஜ் படிக்கிறாரே அந்த மாதிரியா என்று கேட்காதீர்கள். படத்தில் வரும் மூன்று பேரில் ஆமிர் கான் தான் மிகவும் மூத்தவர் என்று படம் பார்பவர்கள் உணரவே வாய்ப்பில்லை. அந்த அளவுக்கு முயற்சி எடுத்து தன் 8 pack கஜினி உடம்பை பல கிலோ குறைத்து உண்மையிலேயே காலேஜ் ஸ்டுடென்ட் போல இருப்பவரே அவர் தான் படத்தில் .

குறிப்பு : இவர் தன் உடம்பை குறைப்பதற்காக வெறும் பாலும் பிரட்டும் சாப்பிட்டு வாழ்ந்தாராம் . தன் பிறந்த நாள் கேக்கை கூட சாப்பிடவில்லையாம் .இது தான் ஆமிர் கானின் professionalism.

மாதவனும், ஷார்மன் ஜோஷியும், காலேஜ் principal ஆக வரும் போமன் இராணியும் , ஆமிருடன் போட்டி போடும் அந்த மாணவனும் தங்கள் வேலையை முழுமையாக செய்திருக்கின்றனர் . மிக சிறிய நேரமே வந்தாலும் மனதை கொள்ளை கொள்ளும் இன்னொரு கதாபாத்திரம் காலேஜ் ஹாஸ்டலில் வேலை செய்யும் சிறுவனான மில்லி மீட்டர் .

படத்தின் பிளஸ் :

படத்தின் தூணாக இருக்கும் ஆமிர் கான் மற்றும் படத்துடன் இணைந்து பயணிக்கும் healthy comedy.


1. சொல்ல வந்தது சீரியசான மேட்டர் என்றாலும் ஒரு நிமிடம் கூட சலிப்பு தட்டாமல் படம் முழுவதும் ரசித்து சிரித்து மகிழும் படியாக தந்திருக்கிறார்கள்.

2.ஒரு வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களை கொடுத்தாலும் அதை தரமானதாக கொடுப்பதற்காகவே ஆமிர் கானை பாராட்டலாம்.

Highlights :

ராஜ் குமார் ஹிரானியின் ஒவ்வொரு படங்களிலும் ஒவ்வொரு positive மேட்டர் இருக்கும்

munnabhai mbbs - கட்டி புடி வைத்தியம்

munnabhai2-  GET WELL SOON (அஹிம்சா வழி)

3 Idiots - ALL IZZ WELL (படம் பார்த்தவர்களுக்கு புரியும்) இதுவும் ஹிட்டு தான் .

கல்லூரி விழாவின் போது ஹிந்தி அரை குறையாக தெரிந்த அந்த opposite மாணவன் , அனைவரையும்  கவர்வதற்காக தான் இன்னொருவரிடம் கேட்டு ஹிந்தியில் எழுதி வைத்த ஸ்க்ரிப்டில் சில வார்த்தைகளை ஆமிர் கான்  மாற்றி எழுதி வைக்க அது புரியாமல் அந்த மாணவன் அதை மேடையில் படிக்கும் காமெடி காட்சிக்கு முழு அரங்கமே விழுந்து விழுந்து சிரிக்கிறது.

படத்தில் வரும் அந்த பிரசவ காட்சி நல்ல காட்சியமைப்பு .

கிளைமாக்ஸ் காட்சியில் வரும் திருப்பம் யூகிக்க முடிந்தாலும் நன்றாகவே இருக்கிறது .

இன்னும் பல .....

படத்தின் பாடல்கள் எங்கேயோ கேட்ட மெட்டுக்கள் ஆனாலும் படத்துடன் பார்க்கையில் ரசிக்க முடிகிறது . படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இன்னொரு நபர் கேமரா மேன் . சிம்லாவாகட்டும் மணாலியாகட்டும் காலேஜ் ஆகட்டும் அனைத்தையும்  கண்ணுக்கு  குளிர்ச்சியாக படமாக்கி இருக்கிறார்.

குறை :

1.பல லாஜிக் மீறல்கள் .

2. படம் முழுக்க நகைச்சுவையாக போவதாலோ என்னவோ all is well பாடலுக்கு பிறகு வரும் tragedy காட்சி படத்துடன் ஒட்டவில்லை .

3  கரீனா கபூரின் காதல் காட்சிகளும் படத்துடன் தனித்தே வருகின்றன. 
---------------------------------------------------------------
 ராஜ் குமார் ஹிரானியால் நல்ல கதையை வைத்து கொண்டு காமெடி கலந்து மேலும் பல அருமையான feel good படங்களை  கொடுக்க முடியும் என்றே தோன்றுகிறது . அவருக்கு ஒரு பெரிய salute . munnabahi mbbs  படத்தை பல மொழிகளில் பல தடவை பார்த்தும் படம் இன்னும் சலிக்க வில்லை என்பதே இதற்கு ஒரு உதாரணம் .


மொத்தத்தில் உங்கள் கவலைகளை எல்லாம் மறந்து சந்தோசமாக ஒரு இரண்டரை மணி நேரத்தை கழிக்க வேண்டுமானால் இந்த படத்திற்கு தாராளமாக செல்லலாம்.


Bottomline:
Come with a grin , go with a big smile on your face
இன்னும் இந்த படம் பற்றி மறந்தவைகளை முடிந்தால் மறுபடியும் எழுதுகிறேன். நண்பர்கள் மீண்டும் அழைப்பதால் இப்போது மீண்டும் தயாராகிறேன் 3 Idiots பார்க்க .




8 comments:

Prathap Kumar S. said...

கலக்கல் விமர்சனம்... சூப்பரா எழுதியிருக்கீங்க... மாதவனைபத்தி எதவுதும் சொல்லாம விட்டுட்டீங்க... இதோ கிளம்பிட்டேன் 3 இடியட்ஸ் பார்க்க....

மேவி... said...

FIVE POINT SOMEONE....கதையை பற்றி சொல்லாமல் விட்டுடிங்களே ........ அதை தழுவி தானே எடுத்து இருக்காங்க ......

உங்கள் விமர்சனம் அருமை ....நேரம் கிடைத்தால் படம் பார்க்கிறேன்

ROBOT said...

//நாஞ்சில் பிரதாப் said...
மாதவனைபத்தி எதவுதும் சொல்லாம விட்டுட்டீங்க//

நன்றி திரு நாஞ்சில் பிரதாப் ,

மாதவன் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். rang de basanti படத்தில் சித்தார்த் கதாபாத்திரம் ஆமிர் கானின் கதாபாத்திரத்தை விட கொஞ்சம் கூடுதல் weightage உடையது அதே போல் அனைத்து கதாபாத்திரமும் importance உள்ளதாக இருக்கும் . score செய்யும் வாய்ப்பும் அதிகம். ஆனால் இது (3 Idiots) ஆமிர் கானின் one man show என்றே சொல்ல வேண்டும். மற்றவர்களுக்கு ஸ்கோர் செய்யும் வாய்ப்பு கொஞ்சம் குறைவாகவே உள்ளது . இருந்தாலும் மாதவனும் , ஷார்மன் ஜோஷியும் எந்த குறையும் வைக்கவில்லை. தங்கள் பணியை செவ்வனே செய்திருக்கின்றனர்.
//இதோ கிளம்பிட்டேன் 3 இடியட்ஸ் பார்க்க//

பார்த்து விட்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

ROBOT said...

நன்றி திரு டம்பி மேவீ,

ஆம் அதை மறந்து விட்டேன் . சேடன் பகத்தின் "FIVE POINT SOMEONE " நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் தான் இது . அந்த நாவலில் இருந்து மைய கதையை எடுத்துக்கொண்டு அதில் கொஞ்சம் முன்னா பாய் படத்தில் உள்ளது போன்ற சில சமாச்சரங்களை சேர்த்து படமாக்கி இருக்கின்றனர் . நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக பாருங்கள் . நல்ல திரைப்படம் .

Anonymous said...

itho naanum kilamburen

ROBOT said...

//itho naanum kilamburen//

வருகைக்கு நன்றி . பார்த்து விட்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

தர்ஷன் said...

ட்ரைலரில் மாதவனை நிறைய காட்டினார்களே படத்தில் அவருக்கு வாய்ப்புகள் குறைவோ?

ROBOT said...

@ தர்ஷன்

வாய்ப்புக்கள் குறைவு என்று சொல்வதை விட படத்தின் கதை முழுக்க முழுக்க ஆமிர் கானின் rancho கதாபாத்திரத்தை சுற்றியே அமைந்துள்ளதால் அப்படி தோன்றுகிறது.

Post a Comment

படித்தது பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் தங்கள் கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள இங்கே பதிவு செய்யவும்.என் எழுத்துக்களை நான் மெருகேற்றிக்கொள்ள உதவும்.மேலும் எழுத எனக்கு உற்சாகம் அளிக்கும்.