Sunday, November 22, 2009

பழசி ராஜா - திரை விமர்சனம்

தரமான திரைப்படங்களுக்கு ஒரு காலத்தில் பெயர் போன, ஆனால் இப்போது அரிதாகி போன  மலையாளத் திரை படைத்துறை தந்திருக்கும் ஒரு தரமான படைப்பு இந்த பழசி ராஜா . தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டு இருக்கிறார்கள்.


பழசி கேரள வர்மா ஆங்கிலேயர்களை எதிர்ப்பு போராட்டத்தை முதலிலேயே துவக்கியைதையும் அவர் போராடிய விதத்தையும் மிக நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார்கள். பழசி ராஜாவை பற்றி நம் மக்களுக்கு அதிகம் தெரியாததால் தெரிந்து கொள்ள இந்த திரைப்படம் உதவுகிறது.

மம்முட்டி பழசி ராஜாவாகவே வாழ்ந்திருக்கிறார். தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் மனதில் நிற்கிறார் .அவரது படை தளபதி கதாபாத்திரத்தில் சரத்குமார் தனது பணியை செவ்வனே செய்திருக்கிறார் .இவரின் உடல் இந்த வேடத்திற்கு பெரிய பலம் . படத்தில் குறிப்பிட வேண்டிய இன்னும் இரண்டு பேர் மனோஜ் கே ஜெயன் மற்றும் அவர் துணைவியாக வரும் பத்மப்ரியா . இவர்கள் இருவரும் மலை வாழ் மக்களுக்கு தலைமை தாங்கி போர் புரிபவர்கள் . பத்மப்ரியா இப்படி கூட நடிப்பார் என்று இந்த படம் பார்த்த பின் தான் தெரிந்து கொண்டேன் . படத்தின் இன்னொரு கதாநாயகி கன்னிகா. படம் முழுவதும் அழுது கொண்டே இருக்கிறார் . மற்றபடி சொல்வதற்கு ஏதும்  இல்லை .

படத்தை மலையாளத்தில் பார்த்தால் கூட கதையை நமக்கு புரிய வைத்து விடும் நமது இசை ஞானியின் பின்னணி இசை . பெரிய இசை ராஜாங்கமே நடத்தி இருக்கிறார் இந்த இசை மேதை . பின்னணி இசை என்றால் அது இளைய ராஜா தான் என்று ஆணித்தனமாக நிரூபித்திருக்கிறார். காடுகளில் நடக்கும் போர் காட்சி , ஆங்கிலேயர் இடத்தில நடக்கும் காட்சி , மலை வாழ் மக்கள் ஒளிந்திருந்து பறவை போல் ஒழி எழுப்பி தாக்குவதாகட்டும் அனைத்திலும் இயற்கையான தத்ருபமான இசையினால் மிரட்டியிருக்கிறார் நம் மேஸ்ட்ரோ. உதாரணமாக ஆங்கிலேய கவர்னர் டங்கன் உடன் பழசி ராஜாவாகிய மம்முட்டி சமாதானம் பேச வரும் காட்சியில் இரண்டு ஆங்கிலேயர்களில் ஒருவர்  பழசி ராஜா தனியாக வந்திருக்கிறார் அவரை கைது செய்து விடலாம் என்பார் . அப்போது இன்னொருவர் கோட்டைக்கு வெளியே நிற்கும் பழசி ராஜாவின் படையை அவருக்கு கட்டும் காட்சியில் தனது இசையின் மூலம் அந்த ஆங்கிலேயர்க்கு ஏற்படும் பயத்தை உணர்த்தியிருப்பார். அந்த காட்சி சொல்லி புரிய வைக்க முடியாது இசையுடன் பார்த்தால் தான் புரியும் இளையராஜா அவர்களின் மகிமை.

 படத்தில் மிக பெரிய பலம் cinematography மற்றும் பின்னணி இசை. போர்க்காட்சிகளை தனது கேமரா மூலம் நம் கண் முன் நிறுத்துகிறார் கேமரா மேன் . படம் முழுவதும்  வித விதமான இசைக்கருவிகளை பயன்படுத்தி இருக்கிறார் இளையராஜா . படத்தில் இரண்டு பாடல்கள் . குன்றத்து கொன்றைக்கும் பாடல் சித்ரா அவர்களின் குரலில் தாலாட்டுகிறது என்றால் மது பாலகிருஷ்ணன் குரலில் வரும் ஆதி முதல் காலம் பூத்ததிங்கே  பாடல் நம்மை மிரள வைக்கிறது . இந்த படலை படமாக்கி இருக்கும் விதமும் படத்தில் இந்த பாடலை சேர்த்திருக்கும் இடமும் கன கச்சிதம்  (Perfect match).

இந்த கால கட்டத்தில் இப்படி ஒரு வரலாற்று கதையை படமாக எடுப்பதே ஒரு சவாலான விஷயம் . அதை நேர்த்தியாக எடுப்பதென்பது இன்னும் சவாலான ஒன்று . அதை முடிந்த வரை நன்றாக செய்திருப்பதற்காகவே இந்த படத்தையும் , இதன் இயக்குனரையும் பாராட்டலாம் .

இந்த வகை திரைப்படங்கள் நிறைய பார்த்து விட்டாலும் (mangal pandey , jodha akbar) இவர்களின் நல்ல முயற்சிக்காக இதையும் பார்க்கலாம்.

பழசி ராஜா - perfectness.

To feel the magic of Maestro, click the Pazhassi Raja trailor link below:





picrure courtesy : www.behindwoods.com
Trailor : www.youtube.com

2 comments:

thatscoolsuresh said...

அருமையான விமர்சனம் சினிமா addict .
ஒரு திருத்தம் ஆதி முதல் காலம் பூத்ததிங்கே பாடல் பாடியது ஜேசுதாஸ் மற்றும் ஸ்ரீ குமார்

ROBOT said...

நன்றி திரு சுரேஷ் .


மலையாளத்தில் அந்த பாடலை பாடியது நீங்கள் சொன்னது போல நம் பத்ம பூஷன் ஜேசுதாஸ் மற்றும் ஸ்ரீ குமார் அவர்கள். இந்த பாடலை தமிழில் பாடியவர்கள் மது பாலகிருஷ்ணன் மற்றும் ராகுல் நம்பியார் . மது பாலகிருஷ்ணன் குரல் கேட்பதற்கு ஜேசுதாஸ் அவர்களின் குரலை போலவே இருக்கும் . இதே போன்ற குரலில் பாட கூடிய இன்னொரு பாடகர் உன்னி மேனன் . அவர் பாடிய பொன் மானே கோபம் ஏனோ படலை ஜேசுதாஸ் பாடியதாகவே நீண்ட நாள் நினைத்து கொண்டிருந்தேன்.

Post a Comment

படித்தது பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் தங்கள் கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள இங்கே பதிவு செய்யவும்.என் எழுத்துக்களை நான் மெருகேற்றிக்கொள்ள உதவும்.மேலும் எழுத எனக்கு உற்சாகம் அளிக்கும்.