Saturday, November 28, 2009

யோகி - விமர்சனம்

யோகி - விமர்சனம் 

நீங்கள் மென்மையான மனதுடையவராக இருந்தால் தயவு செய்து இந்த படத்தை தவிர்ப்பது நல்லது .படம் முழுக்க கொடூரம் தலை விரித்தாடுகிறது.

பிஞ்சு குழந்தையை கையில் வைத்து இருக்கும் சிறுவனை அவன் தந்தை எட்டி உதைப்பதால் அந்த குழந்தை இறந்து போவது . அந்த கணவனின் தொல்லை தாங்க முடியாமல் அந்த சிறுவனின் தாய்  தற்கொலை செய்து கொள்வது இது போன்ற கொடுமைகளை அனுபவித்து அதனால் பணத்திற்காக எதுவும் செய்யும் அந்த சிறுவன் தான் படத்தின் நாயகன் அமீர் . கழுத்தை அறுத்து கொலை செய்வது போன்ற காட்சிகள் என்று  வன்முறையின் உச்ச கட்டமாக இருக்கிறது  இந்த படம் .

இவ்வாறு அவன் திருடும் ஒரு காரில் அவனுக்கு கிடைக்கும் குழந்தைக்கும் அவனுக்கும் ஏற்படும் உறவு தான் மீதி கதை . அந்த குழந்தையை கொல்ல அதன் தந்தை (initial பிரச்சனை வந்துர கூடாதுன்னு அப்பா ஆனவர் ) முயற்சி செய்ய அதனை அமீர் எப்படி காப்பதுகிறார் என்று படமாக்கி உள்ளனர் . மிக சில காட்சிகள் மனதை தொடும் படியாக இருந்தாலும் மொத்தத்தில் பெரிய சொதப்பல் .

படத்தில் சொல்லி கொள்ளும் படியாக இருக்கும் ஒரே விஷயம் பின்னணி இசை . பாடல்கள் பெரிய அளவில் ஒன்றும் இல்லை என்றாலும் பின்னணி இசையில் பின்னி எடுத்திருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா . முக்கியமாக அமீர் அந்த காரில் இருந்து குழந்தையை எடுத்து செல்லும் கட்சி மற்றும் சண்டை காட்சிகளில். இன்னொன்று cinematography. அற்புதமாக படமாக்கி இருக்கிறார்கள் .

யோகி இன்னொரு மொழி படத்தின் scene-by-scene copy வேறாம் . அதை கூட சரியாக செய்ய வில்லை என்றே சொல்ல வேண்டும் .இது போன்ற கதைகள் நிறைய பார்த்து சலித்து போனதால் இந்த படத்தை பற்றி சொல்ல வேறேதும் இல்லை.

தமிழில் நல்ல இயக்குனர்கள் நல்ல தரமான படத்தை கொடுத்தவர்கள் hero ஆகும் முயற்சியில் தாங்கள் பெற்ற நல்ல பெயரை கெடுத்து கொள்கிறார்கள் என்பதற்கு சேரன் , எஸ் ஜே சூர்யா வரிசையில் அமீர் சேர்ந்து விடுவார் என்று தோன்றுகிறது .இதில் குறிப்பாக எஸ் ஜே சூர்யாவை  இயக்குனராக பார்க்கவே ஆசைபடுகிறேன் . அவரை போன்று படத்தின் கதையை முன் கூட்டியே சொல்லியும் படத்தை ஹிட் ஆகும் தைரியம் உடையவர்கள் மிகவும் அபூர்வம் . படத்தின் திரை கதையில் தொய்வில்லாமல் ரசிக்கும் படியாக தருவது இவரின் மிக பெரிய பலம் .ஆனால் அவர் அநியாயமாக hero ஆகி வியாபாரி , திருமகன் என்று கொலையாய்  கொள்கிறார் இப்போது . அதே நிலைக்கு அமீரும் வந்து விடக்கூடாது என்பதே நம் ஆசை .

 

No comments:

Post a Comment

படித்தது பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் தங்கள் கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள இங்கே பதிவு செய்யவும்.என் எழுத்துக்களை நான் மெருகேற்றிக்கொள்ள உதவும்.மேலும் எழுத எனக்கு உற்சாகம் அளிக்கும்.