Sunday, August 8, 2010

எந்திரன் - இசை எனது பார்வையில்

நீண்ட நாள் கிடந்த தவத்தின் பலன் இதோ ஓரளவு கிடைத்து விட்டது. ஆம் எந்திரன் பாடல்கள் வெளியாகி விட்டதை தான் சொல்கிறேன்.

முதலில் இந்த album நாயகன் oscar winner நமது ரகுமான் இத்தகைய படத்திற்கு தான் ரொம்ப ஏங்கி கிடந்திருக்கிறார் போல. சும்மா புகுந்து விளையாடி இருக்கிறார். என்ன என்ன experimentation பண்ண முடியுமோ அனைத்தையும் perfection உடன் செய்திருக்கிறார். அதன் விளைவு அனைத்து பாடல்களையும் கேட்கும் போது நமக்கு கிடைக்கும் ஒரு புதுமையான அனுபவம் . 

சில பாடல்கள் ரகுமானின் வழக்கமான style பாடல்கள்  தான். அவற்றை பற்றி முதலில் பேசுவோம்.

 காதல் அணுக்கள்

காதல் அணுக்கள்  உடம்பில் எத்தனை neutron electron உன் நீலக்கண்ணில் மொத்தம் எத்தனை என்று ஆரம்பிக்கும் ஒரு விஞ்ஞான எண்ணத்துடன் கூடிய duet பாடல். vintage rahman melody. கேட்பதற்கும் அதை விட பார்பதற்கும் மிகவும் இனிமையாக இருக்கிறது(உபயம் : trailor clipping).
 
அரிமா அரிமா

ஹரிஹரன் சாதனா சர்கம் பாடியிருக்கும் ஒரு perfect superstar பாடல்.

 "உன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும் உலகம் உலகம் கை தட்டும் நீ உலகம் தாண்டிய உயரம் கொண்டதில் நிலவு நிலவு தலை முட்டும் " என்று உண்மையை கூறி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் இந்த வரிகள் தான் இந்த பாடலின் பெரும் பலம்.

"நான் மனிதன் அல்ல அக்றினையின் அரசன் நான் காமுற்ற கணினி நான் சின்னஞ்சிறுசின் இதயம் தின்னும் சிலிகான் சிங்கம் நான் " 

 என்று வைரமுத்து அவர்கள் ரோபோ ரஜினியின் புகழ் பாடியிருக்கும் பாடல். சிலிகான் சிங்கம் போன்ற வரிகள் வரும் போது ஹரிஹரன் அவர்களின் modulation அருமை.

Boom boom robo da zoom zoom robo da

ஏ ஆர் ரகுமான் வழக்கமாக rap பாட வைக்கும் blaze இல்லாமல் முதல் முறையாக Yogi B உடன் இணைந்திருக்கும் ஒரு rap பாடல். ரோபோ ரஜினியின் BGM என்று நினைக்கிறேன்.

வைரமுத்துவின் வாரிசு மதன் கார்க்கியின் (robotics professor என்று நினைக்கிறேன்) வரிகளில்  அறிவியலும் தெரிகிறது தந்தை பாணியில் ஆய்வும் அறிவும் தெரிகிறது. எழுதுவது superstar ரஜினிக்கு என்பதால் இது போன்ற வரிகளை பாடலில் புகுத்தி இருப்பது அவர் புத்திசாலித்தனம்.

" ஆட்டோ ஆட்டோக்காரா ஏ ஆட்டோமேடிக் காரா கூட்டம் கூட்டம் பாரு உன் ஆட்டோகிராப்புக்கா "


 Chitti Dance Showcase

பூம் பூம் ரோபோ டா பாடலின் இன்னொரு version. trailor பார்த்ததில் இருந்து இந்த பாடலில் இதுவரை பார்த்திடாத நம் superstar dance movements பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

கிளிமாஞ்சாரோ

பா விஜய் எழுதியுள்ள ஒரே பாடல் . முழுக்க முழுக்க ஒரு african tribal song என்று ஷங்கர் சொல்லி இருக்கிறார். மேலும் மிச்சு பிச்சுவில் அருமையான இடங்களில் படமாக்கி இருக்கிறார்கள். கேட்பதற்கு புதுமையாக தான் இருக்கிறது. பார்ப்போம்.


இரும்பிலே ஒரு இருதயம்

முதலில் கேட்ட போது எது ஏதோ pop song போல இருக்கிறதே என்று நினைத்தேன். ஆனால் கேட்க கேட்க சும்மா பத்திக்கிர பாடல் இது. பாடியிருப்பவர் சாட்சாத் ஏ ஆர் ரகுமானே . தனது காந்தர்வ குரல் மூலம் magic செய்திருக்கிறார். அநேகமாக படம் பார்க்கும் போது இது தான் இன்னொரு அதிரடிக்காரன் போல இருக்கும். கார்க்கி அவர்கள் இந்த படத்தில் எழுதியிருக்கும் பாடல்களில் " The best "   

எச்சில் இல்லா எந்தன் முத்தம் சர்ச்சை இன்றி கொள்வாயா
ரத்தம் இல்லா காதல் என்று ஒத்திப் போக சொல்வாயா

உயிரியல் மொழிகளில் எந்திரன் நானடி 
உளவியல் மொழிகளில் இந்திரன் தானடி 

என்பது போன்ற அறிவியல் ஹை கூ கவிதைகள் நம் தமிழ் திரை உலகிற்கு புதிது தான்.

இனி எந்திரனின் ஹைலைட்டிற்கு வருவோம் :

புதிய மனிதா

"Anything that starts well ends well " என்பது போல இந்த album ஆரம்பமே இந்த அதிரடி பாடல் தான். இந்த படத்தின் பாடல்களின் உச்சம் இந்த பாடல் தான்

இது வரை நாம் கேட்டிராத புதுமையான fresh ஆன இசை. ஏ ஆர் ரகுமானின் குரலில் எந்திரனின் உருவாக்கத்தை விளக்கும் பாடல் பின் அவர் மகள் கதிஜா குரலில் வந்து SPB அவர்களின் மயக்கும் குரலில் நுழையும் போதே நாம் இது வரை உணராத ஒரு உணர்வு வந்து விடுகிறது. மேலும் இந்த பாட்டிற்கு பக்க பலம் வைரமுத்து அவர்களின் வைர வரிகள் மற்றும் SPB . இவர்களை தவிர யாராலும் இது போன்ற ஒரு படைப்பை கொடுக்க முடியுமா என்பது சந்தேகமே !!! 


விஞ்ஞானி ரஜினிக்கும் தான் உருவாக்கிய எந்திரனுக்கும் இடையில் உள்ள உறவை வைரமுத்துவை விட எவராலும் இப்படி வர்ணிக்க முடியாது.

ரோபோ ரோபோ பல மொழிகள் கற்றாலும் என் தந்தை மொழி தமிழ் அல்லவா 
ரோபோ ரோபோ பல கண்டம் வென்றாலும் என் கர்த்தாவுக்கு அடிமை அல்லவா ! !

கருவில் பிறந்த எல்லாம் மரிக்கும் ; அறிவில் பிறந்தது மறிப்பதே இல்லை 


நான் இன்னொரு நாண்முகனே , நீ என்பவன் என் மகனே ; ஆண் பெற்றவன் ஆண் மகனே ஆம் உன் பெயர் எந்திரனே 

இந்த பாடலை கேட்கும் போது நமக்கே எந்திரனுடன் ஒரு பிணைப்பு ஏற்படுகிறது. ஷங்கர் கூறியதை போல ரகுமான் ஆஸ்காருக்கு 200 % தகுதியானவர் என்பதை இன்னொரு முறை உலகிற்கு நிருபித்திருக்கும் ஒரு பாடல்.


இந்த படத்தின் தன்மையை முழுதும் உணர்ந்து எழுதியிருக்கும் அருமையான வரிகளில்  வைரமுத்து அவர்களின்  உழைப்பு நம்மை வியப்பூட்டுகிறது. 

இந்த படத்தின் பாடல்களை ஒவ்வொரு முறை கேட்கும் போது ஒவ்வொரு பாடல் முதல் இடத்தை பிடிக்கிறது. எந்த பாடல் மிகவும் பிடித்திருக்கிறது என்று அனைவரையும் கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாடலை கூறுவதே இதற்கு ஒரு உதாரணம்.

மொத்தத்தில் ஒரு மிகவும் புதிய அனுபவத்தையும் சந்தோசத்தையும் கொடுத்த இந்த எந்திரன் குழுவிற்கு ஒரு royal salute. Superstar கூறியதை போல "Its going to be an experience" எந்திரன் படம் மட்டும் அல்ல பாடல்களும் ஒரு அனுபவம் தான். அதை வார்த்தைகளில் சொல்ல முடியாது நீங்களே உணருங்கள்.

இந்த பாடல்களை பற்றி மாற்றுக் கருத்து கொண்டவர்களுக்கு  நான் பதில் சொல்ல வேண்டியதில்லை உலகமே பதில் சொல்கிறது.

apple itunes report மற்றும் UK , US நாடுகளில் இருந்து கூட வரும் வரவேற்பு.


தமிழ் திரைபடத்தை உலக அளவிற்கு கொண்டு செல்லும் ஷங்கர் மற்றும் அவர் குழுவின் இந்த முயற்சியை இரு கரம் கூப்பி வரவேற்கலாம்.

ஷங்கர், ரகுமான் , வைரமுத்து , ஐஸ் இவற்றை எல்லாம் தாண்டி புது அவதாரம் எடுக்கும் நம் superstar ரஜினிகாந்த். U cant anything bigger than this. Eagerly waiting for the awesome experience on screen.

புதிய மனிதா சீக்கிரம் பூமிக்கு வா !!!!!!!!!!!!!!!!!!!   

13 comments:

Anonymous said...

பூமிக்கு வந்தாச்சு ...தியேட்டர் க்கு தான் வரணும் ;)

MPL said...

very nice.i am expect more.... by !!!

தர்ஷன் said...

அருமையான விமர்சனம்

ROBOT said...

நன்றி தர்ஷன் & MPL

Vee said...

Looks like endhiran team itself has written this post.

harisivaji said...

rajinifans.comla articlea vanthuruku good

ROBOT said...

@ harisivaji

நான் கூட பார்த்தேன்.ராவணன் என்ற பெயரில் போட்டிருந்தார்கள்.நான் சொன்னதும் எனது blog முகவரி கீழே போட்டார்கள். அவர்களுக்கு என் நன்றி.

and thank u for informing me...

@ Vee

No I m not part of the team who worked for endhiran but I am part of the team who s gonna enjoy endhiran. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

priya said...

envazhi websitela 1 commenta ravanan perla vanduruku. Check it.

Good review

ROBOT said...

@priya

நன்றி.

அந்த ராவணன் யார் என்றே தெரியவில்லை. எனது இந்த பதிவை அப்படியே copy செய்து எல்லா தளத்திலும் அவர் பெயரில் போட்டு கொள்கிறார்.

Anyway thanks for the info.

SurveySan said...

good.

priya said...

/அந்த ராவணன் யார்
என்றே தெரியவில்லை./

Ungaluku avardhan villan poliruku

ROBOT said...

@ priya

ஆமாங்க சாதாரண வில்லன் இல்ல படு பயங்கர வில்லன். இருந்தாலும்

ராவணனை தோற்கடித்த ரோபோ .....

அய்யய்யோ நான் அந்த ராவணனை சொல்லவில்லை. இந்த வருடம் பெரிய எதிர்பார்ப்புடன் release ஆன படங்களில் மணிரத்னத்தின் ராவணனையும், superstar in ரோபோவையும் சொன்னேன். இன்னும் ஓரிரு மாதங்களில் அனைத்திலும் இது தான் headlines.

அப்புறம் நன்றி என்வழியில் கமெண்ட் போட்டு உண்மையை சொல்லியதற்கு...

priya said...

/ராவணனை தோற்கடித்த ரோபோ .....
அய்யய்யோ நான் அந்த
ராவணனை சொல்ல//

Andha ravananathan sollungalen. Robo nu per vachukitadu idhukudhana?

Post a Comment

படித்தது பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் தங்கள் கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள இங்கே பதிவு செய்யவும்.என் எழுத்துக்களை நான் மெருகேற்றிக்கொள்ள உதவும்.மேலும் எழுத எனக்கு உற்சாகம் அளிக்கும்.