Sunday, December 21, 2014

லிங்கா விமர்சனம் - என் பார்வையில்

லிங்கா விமர்சனம் - என் பார்வையில்

சூப்பர் ஸ்டார் படம் வந்தாலும் வந்தது அவரவர் தன் வஞ்சத்தை விமர்சனம் என்ற பெயரில் கொட்டி தீர்த்து விட்டனர்.

சரி அப்படி செய்யப்பட்ட விமர்சனங்கள் பற்றி ஒரு கருத்து பதிவு தான் இது.

இவர்கள் படத்தின் அருமையான கதையை விட்டு விட்டார்கள். படத்தில் உள்ள நல்ல கருத்தை விட்டு விட்டார்கள். ராஜா லிங்கேஸ்வரன் கதா பாத்திரத்தை கம்பீரமாக ஏற்று நடித்த ரஜினியின் நடிப்பை விட்டு விட்டனர். முதல் பாதியில் ரசித்து சிரித்த நகைச்சுவையையும் எப்போது ஆரம்பித்தது எப்போது முடிந்தது என்றே தெரியாத முதல் பாதியின் வேகமான ரவிகுமாரின் திரைகதையை விட்டு விட்டார்கள்.தேசப்பற்றுடன் அமைந்த அந்த அருமையான flashback மற்றும் அதில் இருந்த வாழ்க்கையை உணர்த்தும் நல்ல வசனங்களை விட்டு விட்டார்கள்.லிங்கேஸ்வரன் introduction ஆகும் அந்த மெய் சிலிர்க்கும் train சண்டையை முழுதும் மறந்து விட்டார்கள். இக்கால ரஜினி introduce ஆகும் நாம் இது வரை பார்த்திடாத stylish and class superstar introduction song பற்றி பேசாமல் விட்டு விட்டார்கள்.ரெண்டு கதாநாயகிக்கும் சமமாக கொடுத்த நல்ல கதாபாத்திர அமைப்பை பற்றி பேசாமல் விட்டு விட்டார்கள்.

நாட்டு பற்றை தூண்டிய இந்தியனே வா பாடல் பற்றி மறந்து விட்டார்கள். மோனா பாடலில் இன்னும் ஒரு இளைஞன்  போல துரு துருவென வேகத்துடன் இருக்கும் ரஜினியை அறவே மறந்து விட்டார்கள்.

இதை எல்லாம் விட்டு விட்டு கிட்ட தட்ட படமே முடிந்து விட்ட நிலையில் வரும் அந்த climax balloon fight பற்றி மட்டும் குறை கூறும் இந்த கும்பலை என்னென்று சொல்வது.  இப்போது திரை அரங்கில் பார்த்த போது கூட இவர்கள் கூறும் அந்தஅந்த சண்டை காட்சிக்கு பெரிய வரவேற்பு இருந்தது. இவர்கள் இப்படி என்றால் இன்னும் ஒரு பேரறிவாளி "the Hindu" நாளிதழில் விமர்சனம் எழுதுகிறார் இதற்கு எதிர் மாறாக. லிங்கா படம் முழுவதும் ஒன்றுமே இல்லை ஆனால் அந்த இறுதி சண்டை காட்சி  தான் ரஜினி படம் பார்த்த திருப்தியை கொடுக்கிறது என்று. ஆக இந்த அதி புத்திசாலிகளின் கருத்துக்களை சேர்த்து பார்த்தால் கூட லிங்கா படத்தில் ஒவ்வொரு சாராருக்கும் பிடித்த விஷயங்கள் இருப்பதாகத் தானே அர்த்தம் ?

அந்த சண்டை காட்சி ரசிகர்களுக்காகவும் குழந்தைகளை கவரும் வைக்க பட்டது . அதில் கூட எங்கிருந்தோ balloon இல் குதிப்பது போல எடுக்க வில்லையே . மலையின் உச்சிக்கு சென்று அதில் இருந்து குதிப்பது  போல தானே உள்ளது. இதில் குறை கூற என்ன உள்ளது. இதை தான் KSR அவர்களும் அவர்கள் புத்திக்கு உரைக்குமாறு கூறி இருந்தார்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்சியை லிங்கா பட காட்சியுடன் compare செய்து பார்த்தால் தெரியும் நான் சொல்வது என்ன என்று . இத்தனைக்கும் லிங்கா இவ்வளவு பிரம்மாண்டமாக மிக குறைந்த நாட்களில் முடிந்த அளவு சிக்கனமாக எடுக்கப்பட்ட படம் ஆனால் இந்த படத்திற்கு அவ்வளவு செலவு (வெட்டி) வேறு .மேலும் ஒரு காட்சி இன்னொரு படத்தில் எங்கோ இருந்து சம்பந்தமே இல்லாத இடத்தில் குதிப்பார் அந்த அடுத்த superstar ஆசை கொண்ட அதற்கான தகுதியே இல்லாத ஒருவர். அந்த கட்சிக்கான லிங்க் கொடுக்கக்கூட விரும்பவில்லை.ஒருவர் சொல்கிறார் படத்தில்  flashback சென்று விட்டு திரும்ப வர நேரமாகி விட்டது என்று. படத்தின் உயிர் நாடியே அது தான் அதை விட்டு விட்டு படத்தில் நிகழ் காலத்தில் நடப்பதை நீளமாக வைத்து இருந்தால் படத்தில் கதையே இல்லை என்று கூவி இருப்பார்கள்.

இது பத்தாது  என்று distributors என்ற பெயரில் பொய் பிரச்சாரம் வேறு. அதற்கான பதிலையும் KS ரவிக்குமார் அவர்களே தெளிவாக கூறி விட்டார்.

https://www.youtube.com/watch?v=ftvPW18Kfgs&app=desktop

 
மொத்தத்தில் இவர்களின் நோக்கம் லிங்கா படம் பற்றி பேசுவதாக தெரிய வில்லை. ரஜினி என்ற மாமனிதரை முடிந்த வரை ஒழித்து கட்ட வேண்டும் அவர் சூப்பர் ஸ்டார் இல்லை வேறு ஒருவர் தான் என்று பொய்யான அரை கூவல் விட வேண்டும். ஆனால் மக்கள் சக்தியுடன் ஆண்டவனின் ஆசியும் இருக்கும் அந்த நல்ல மனிதரை இவர்களின் இந்த கேடு கேட்ட எண்ணத்தால் ஒன்றும் செய்து விட முடியாது என்பதை காலம் மறுபடியும் உணர்த்தும் என்பதில் ஐயமில்லை. குடும்பம் குடும்பமாக திரை அரங்கில் ரசிக்கும் மக்களே சாட்சி.படத்தில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு காட்சி :

British வில்லன் to ரஜினி : நீ கொடுத்த வாக்க காப்பாத்துவியா

ரஜினி : (no dialogue .. will reply only his mannerism and body language) ஹெய்ய்ய்ய்ய்ய்ய்  ஹேய்ய்ய்..... See you  tomorrow (கம்பீரமாக )

வேறு ஒருவர் இதை செய்திருந்தால் சூரி சொல்வதை போல் "இதெல்லாம் நான் சொன்னா சிரிச்சுருவாங்க பா " இது தான் நடந்திருக்கும்.

அந்த கம்பீரம் தான் ரஜினி என்னும் மகா கலைஞனின் திறமை பலம். அதே தொனியில் தான் இந்த முட்டாள்களுக்கு பதில் கூற வேண்டி இருக்கிறது .

பொய் விமர்சகர்கள் : லிங்கா படம் நல்லாவே இல்ல .. அது சரி இல்ல இது சரி இல்ல

நாம் : (no dialogue .. will reply with only his mannerism and body language) ஹெய்ய்ய்ய்ய்ய்ய்  ஹேய்ய்ய்.....I  am going  to See again tomorrow

இந்த கும்பலுக்கு தேவை விளம்பரம் அதை நாமே இவர்களை ஒரு பொருட்டாய் மதித்து கொடுப்பதை விட்டு விட்டு நமக்கு தலைவரின் பிறந்த நாள் பரிசாக லிங்கா டீம் கஷ்டப்பட்டு கொடுத்த சுமார் 3 மணி நேர பொழுது போக்கை குடும்பத்துடன் ரசிப்போம்.


பெருமையுடன்,
ரஜினி ரசிகன்
12 comments:

arul said...

miga sirantha paarvai rajini rasingan enpathaiyum thaandi

Harish C said...

padam marana mokka sir. summa rajini ya pidikkum nu padam nalla irukku super nu ungalukku neengale aarudhal sollikadhinga. padaiyappa. mutthu madhiri idhula strong aana thiraikkadhai and music illai. suttha waste. rajini ellam padaiyapa oda avar ku mouse pochu. summa nanum field la irukken nu avar nadichutu irukkar

Anonymous said...

ரஜனி ஏன் சூட்டிங்கை கன்னடாவிலே நடத்தினார்? உன்னைப்போல முட்டாள்கள் இருக்கும் வரை ரஜனி ஏமாத்திக்கொண்டே இருப்பார்

Anonymous said...

\\எப்போது முடிந்தது என்றே தெரியாத முதல் பாதியின் வேகமான ரவிகுமாரின் திரைகதையை விட்டு விட்டார்கள்.தேசப்பற்றுடன் அமைந்த அந்த அருமையான flashback மற்றும் அதில் இருந்த வாழ்க்கையை உணர்த்தும் நல்ல வசனங்களை விட்டு விட்டார்கள்.\\

செம காமெடி பாஸ்.. இதுக்கு மேல இந்த படத்த யாரும் கலாய்க்க முடியாது. ஆமா, அப்புறம் ஏன் முதல் பாதில கொஞ்சம் சீன கம்மி பண்ணிட்டாங்களாம்? ஒருவேள எக்ஸ்பிரஸ் டிரையின சூப்பர் பாஸ்டா மாத்தறாங்க போல.

ROBOT said...

@ arul nandri

@Harish sir //rajini ellam padaiyapa oda avar ku mouse pochu// sivaji emthiran ellam padayappaku apuram thaan sir vanduchu...

padaiyappa. mutthu ithaiyellam lingavudan compare panna koodathu enbathu en karuthu.. linga athu pondra oru complete mass masala padam illai. ithu vera genre. athai purinthu kondu paarthaal padam pidikum.

@anony //அப்புறம் ஏன் முதல் பாதில கொஞ்சம் சீன கம்மி பண்ணிட்டாங்களாம்?//

//உன்னைப்போல முட்டாள்கள் இருக்கும் வரை ரஜனி ஏமாத்திக்கொண்டே இருப்பார் //

உண்மையை சொல்பவன் முட்டாள் என்றால் நான் அப்படி இருக்கவே ஆசை படுகிறேன்

5 mins korachuthula enna perusa iruku.. athu kooda ungala madhiri aalunga padam neelam neelam nu koovurathaala thaan sirRajni Magesh said...

Very nice article. Well presented. Long live Superstar.

ROBOT said...

@Rajni Magesh - thanks நாம என்னங்க சொல்றது அதான் உலகமே சொல்லுதே

Anonymous said...

Super article

Anonymous said...

என்னுடைய எக்ஸ்பிரஸ் கருத்தை அனுமதித்தற்கு நன்றி. அந்த முட்டாள் அனானி நான் அல்ல. எனக்கு படத்தின் மேல் சற்று குறையே தவிர ரஜினி .மீது அல்ல. புரிதலுக்கு நன்றி.

மோகன்.

ROBOT said...

:) நன்றி மோகன்

Vasee Rajini said...

Harish idiot.
Then chandramukhi sivaji endhiran ippp lingga varai seitha vasool sathanai neeya senje? Avarukku demand illenna yethukkuda avarai tedhi panam podurangga? Mudthal. Use ur brain. Kanda-kanda naiyellam oru hit kuduka mudiyamma 20 varushamma scene podurathu unaku teriyathu. Obviously u r a jealous freak. The man who was the voted the greatest in India has no mass indeed. Hell

Vasee Rajini said...

ரஜனி ஏன் சூட்டிங்கை கன்னடாவிலே நடத்தினார்? உன்னைப்போல முட்டாள்கள் இருக்கும் வரை ரஜனி ஏமாத்திக்கொண்டே இருப்பார்//
Ahha. yenna arivu.
40 varushamma avar padam karnatakavil tan shooting nadanthatha?
Dey shot there bcoz of the dam mr brainiac.
U must hv missed the 2nd schedule which was shoot in hyderabad. Or the intro song in dubai.
If others didnt even talk a single shot in india but only overseas, u wnt bother ana rajini madthum veliyoor shooting ponna yetho un appa vidthu sotthu kurainjidumma? Unnai mathiri mudhalgal irukkiranaaltan tamil naadu going to the drain

Post a Comment

படித்தது பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் தங்கள் கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள இங்கே பதிவு செய்யவும்.என் எழுத்துக்களை நான் மெருகேற்றிக்கொள்ள உதவும்.மேலும் எழுத எனக்கு உற்சாகம் அளிக்கும்.