எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர்களில் ஒருவரான பாலாவின் இயக்கத்தில் வந்துள்ள ஒரு multistarrer திரைப்படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் சென்றேன். ஆனால் முழு திருப்தி இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
வழக்கமாக பாலாவின் படத்தில் இருக்கும் ஒரு அழுத்தமான கதை இதில் மிஸ்ஸிங். கதை என்று சொல்லி கொள்ள பெரிதாக இல்லை. சூப்பர் சிங்கர் புகழ் அனந்துவின் இரண்டு மனைவியின் இரண்டு மகன்கள் (விஷால் மற்றும் ஆர்யா) ஊர் ஹைனஸ் gm குமாரின் வளர்ப்பு மகனாக வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்கள் வெளியே எப்போதும் சண்டை போட்டு கொண்டிருந்தாலும் உள்ளுக்குள் மிகுந்த பாசத்துடன் இருக்கும் இவர்களின் அன்றாட அட்டகாசம் தான் முதல் பாதி. இவர்கள் வாழ்கையில் ஏற்படும் ஒரு சின்ன திருப்பம் இரண்டாம் பாதி.
முதல் பாதி போவதே தெரியாமல் ஜாலியாக போகிறது பெரிதாக கதை ஒன்றும் இல்லை என்றாலும். அதிலும் படம் ஆரம்ப கட்டத்தில் சும்மா குத்து குத்து என்று குத்தி எடுத்திருக்கிறார்கள். விசாலின் அறிமுகமே அட்டகாசமான குத்து அடுத்து ஆர்யா தன் பங்கிற்கு தன் அம்மாவுடன் போடும் குத்து என்று ஆரம்பித்து வேகமாக பொழுது போக்காக போகும் முதல் பாதி. இரண்டாம் பாதியில் தான் கதைக்குள் போக போகிறார் என்று பார்த்தால் ஏற்கனவே பார்த்த வழக்கமான பாலா பட கிளைமாக்ஸ்.




சூர்யாவின் அகரம் foundation விழா காட்சியில் ஆர்யாவின் வசனம் மூலம் வரும் சராசரி மனிதனின் comments மற்றும் அதற்கு சூர்யாவின் பதில்கள் bala's touch. சில காட்சியே வந்தாலும் கொடூரத்தின் மையமாக வரும் வில்லன் ஆர் கேவிற்கு பெரிதாக வேலை இல்லை என்றாலும் பாலா மட்டுமே படைக்க கூடிய ஒரு ரோல்.
யுவனின் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட் என்றாலும் முக்கியமான இரண்டு நல்ல பாடல்களை (ஒரு மலை ஓரம் என்ற மெலடி மற்றும் அவன பத்தி நான் பாட போறேன் என்ற குத்து பட்டு )படத்தில் use செய்யாதது ஏமாற்றம்.
படத்தின் கடைசி இருபது நிமிடங்கள் பிதாமகன் படத்தின் காட்சிகளை கொஞ்சம் மாற்றி ரீமேக் செய்தது என்று பாமர ரசிகன் கூட உணர முடியும். வழக்கமாக படத்திற்கு படம் வித்தியாசமான கதைக்களனில் பயணம் செய்து மற்ற இயக்குனர்களில் இருந்து தனித்து விலகி நிற்கும் பாலா இந்த படத்தில் தனது சுயத்தில் இருந்தே விலகி நிற்பது போன்ற ஒரு உணர்வு. எப்போதும் சந்தோசமான முடிவு என் படத்தில் இருப்பதில்லை என்ற குறை அதிகம் பேர் கூறியதால் அவன் இவன் அப்படி இருக்காது என்று பாலா ஒரு முறை கூறியதாக ஞாபகம். ஆனால் அவரே நினைத்தால் கூட அதை மாற்ற முடியாது என்று நினைக்கிறேன். என்ன இந்த படத்தில் heroes சாக வில்லை ஆனால் முக்கிய கதாபாத்திரத்தை கொடூரமாக கொன்று அதே தாக்கத்தை கொண்டு வந்து விட்டார்.
படத்தின் பிளஸ் :
மிக வேகமாக நகரும் முதல் பாதி
வித்தியாசமான விஷால்
முதல் பாதி நகைச்சுவை
குறை :
வழக்கமான பாலாவின் வித்தியாசமான சிந்தனை மற்றும் திரைக்கதை இல்லாமல் எளிதாக யூகிக்க முடியும் வழக்கமான காட்சிகள் .
பிதாமகன் கிளைமாக்ஸ் repeat.

அவன் இவன் படம் முடியும் போது ஒரே கேள்வி தான் தோன்றுகிறது பாலாவை பற்றி : அவனா இவன் ?
No comments:
Post a Comment
படித்தது பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் தங்கள் கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள இங்கே பதிவு செய்யவும்.என் எழுத்துக்களை நான் மெருகேற்றிக்கொள்ள உதவும்.மேலும் எழுத எனக்கு உற்சாகம் அளிக்கும்.