ஹிந்தியில் டிசம்பரில் வெளி வந்து சக்கை போடு போட்ட ஒரு அருமையான திரைப்படமான 3 Idiots படத்தை தமிழில் டாக்டர் விஜய் செய்ய போவதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியாத நிலையில் இது ஒரு வேலை நடந்தால் என்ன நடக்கும் என்ற எனது சந்தேகங்கள் ........

1. விஜய் கண்டிப்பாக ஆமிர் கான் கதாபாத்திரம் தான் வேண்டும் என்று சொல்வார் ( ஆமிர் கான் இடத்தில் விஜய் ??? ) என்றால் ஷார்மன் ஜோஷி மற்றும் மாதவன் வேடத்தில் யார் நடிப்பார்கள் ? விஜயின் அபிமான நடிகரான ஸ்ரீ மன் ????? (மண்ணா போச்சு )
2 . ஆமிர் கான் படத்தில் ஒரு புத்திசாலியான மாணவன் . மேலும் engineering முடித்த ஒரு scientist. அப்படியானால் நம் டாக்டர் விஜயும் புத்திசாலியான மாணவன் ? (இனி doctor + engineer விஜய் என்று போட்டு கொள்வர் போல )

மேலே கூறிய அனைத்தையும் கொஞ்சம் நினைத்து பாருங்கள் . இது சும்மா சாம்பிள் தான் . மொத்த படமும் ஐயோ !!!!!!!!!!!!
நினைத்து பார்க்கவே எவ்வளவு கொடுமையாக இருக்கிறது. இது மட்டும் நடந்தால் .......
atleast சம்பந்தப்பட்டவர்கள் நினைத்து பார்ப்பார்களா ? யாராவது இந்த பேரழிவை தடுத்தால் நல்லது எனக்கு இல்லை சினிமா உலகிற்கே.