காதல் , வெட்டு குத்து , அடி தடி போன்றவை உள்ள படங்களை பார்த்து சலித்து போனவர்களுக்கு வரப்பிரசாதம் இந்த திரைப்படம் .
யதார்த்தமான வித்தியாசமான கதையுடன் எல்லா விதத்திலும் நேர்த்தியுடன் இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். progeria என்ற நோயால் பதிக்கப்பட்ட ஒரு சிறுவனை சுற்றி அமைந்திருக்கும் திரைக்கதை. progeria என்னும் நோயால் பாதிக்கபட்டவர்கள் ஒரு வயது ஆவதற்குள் ஐந்து மடங்கு வயதானவர்களை போல ஆகி விடுவர்.
progeria என்ற நோயுள்ள குழந்தை ஆரோ . இவர் தனது பாட்டி மற்றும் தாயுடன் வசிக்கிறார் . இவரின் தந்தையான அபிஷேக் பச்சன் அரசியல்வாதி. அரசியல் வாதி என்றால் நம் வழக்கமான ரவுடிகளுடன் திரியும் அரசியல் வாதி அல்ல. அரசியல் என்பது கூட ஒரு நல்ல தொழில் தான் அதில் கூட நாம் செய்ய வேண்டிய கடமை நிறைய இருக்கிறது என்று கருதும் ஒருவர். ஆரோ வின் தாய் வித்யா பாலன் ஒரு "gynaecologist" பிரசவ டாக்டர் . இருவருக்கும் திருமணம் ஆகும் முன்பே பிறந்த குழந்தையான ஆரோவினால் தன் லட்சியம் பாதிக்கப்படும் என இருவரும் பிரிகின்றனர்.
ஆரோ படிக்கும் ஒரு பள்ளியில் ஒரு விழாவிற்கு தலைமை தாங்கி பரிசு வழங்கும் சமயம் ஆரோவை சந்திக்கிறார் ஆரோவின் தந்தையான M.P. அபிஷேக் அந்த உண்மை தெரியாமல் . இதிலிருந்து தொடரும் அவர்கள் நட்பு எப்படி பிரிந்த ஆரோவின் குடும்பத்தை இணைக்கிறது என்பது தான் மீதி கதை.
இதில் என்ன புதிதாக இருக்கிறது என்று நினைக்கலாம். ஆனால் இந்த கதையை ஒரு கவிதை போல படமாக்கி உள்ளனர். நோயினால் பதிக்கப்பட்ட ஆரோவை பற்றிய கதை என்பதால் சோகமாக இருக்கும் என்று நினைத்தால் படத்தை மிகவும் குதூகலமாக்குவதே அந்த சிறுவன் ஆரோ தான். அவன் வரும் ஒவ்வொரு காட்சியும் அவன் பேசும் ஒவ்வொரு வசனமும் ரசிக்கும் படியாக தந்திருப்பது இயக்குனரின் சாமர்த்தியம். இத்தகு நோயால் பாதிக்கப்பட்ட சிறவனை பார்த்து அவன் தாய் வித்யா பாலனிடம் இன்னொரு குழந்தையின் தாய் உன் குழந்தைக்கு என்ன பிரச்சனை என்று கேட்கும் போது பல லட்சம் பேர்களில் ஒருவருக்கு மட்டுமே இருக்கும் இந்த "chromosome" பிரச்சனை என் குழந்தைக்கு இருக்கிறது . அவன் மிகவும் அதிஷ்டசாலி தானே என்று கேட்கும் காட்சி "height of positiveness". ஒரு நல்ல அரசியல்வாதியாக இருப்பதால் என்ன மாதிரி பிரச்சனைகள் வரும் அதை அபிஷேக் எப்படி சமாளிக்கிறார் என்பதையும் அழகாக காட்டியிருக்கிறார்கள்.
படத்தின் ஒவ்வொரு காட்சியின் மெருகையும் குலைக்காமல் மேலும் பலம் சேர்ப்பது பி சி ஸ்ரீராமின் ஒளிப்பதிவு மற்றும் இளையராஜாவின் இசை. பாடல்கள் அனைத்தும் நாம் நெடுங்காலமாக கேட்டு ரசித்து கொண்டிருக்கும் இசைஞானியின் பழைய தமிழ் பட பாடல்கள் என்றாலும் அதை சரியான இடத்தில் படத்தில் சேர்த்திருப்பது இயக்குனரின் திறமை. குறிப்பாக பா தீம் மனதை விட்டு நீங்க மறுக்கிறது. (இது நாம் ஏற்கனவே கண்டு கொள்ளாமல் விட்ட அது ஒரு கனா காலம் தமிழ் படத்தின் title சாங்).

மொத்தத்தில் நல்ல படங்களை விரும்புபவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு படம் இந்த பா .
7 comments:
Yes good film... your review Rocks.. Keep it up...
Sam
விமர்சனம் கலக்கல்...பார்த்துடலாம்...
வருகைக்கு நன்றி திரு சம்பத்.
நன்றி திரு நாஞ்சில் பிரதாப். படம் பார்த்து விட்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும் .
:)
நல்லா சிம்பிளாச் சொல்லியிருக்கீங்க...good review
நன்றி திரு தமிழ்ப்பறவை.
Post a Comment
படித்தது பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் தங்கள் கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள இங்கே பதிவு செய்யவும்.என் எழுத்துக்களை நான் மெருகேற்றிக்கொள்ள உதவும்.மேலும் எழுத எனக்கு உற்சாகம் அளிக்கும்.